கௌதம முனிவரிடம் சாபம் பெற்ற பல்லிகள்

பல்லி நம் மீது விழும் இடத்திற்கேற்ப தோஷங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நமக்கே தெரியாமல் பல்லி நம் மீது விழுந்தால், அந்தத் தோஷத்தில் இருந்து நம்மை எப்படி விடுவித்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.
கௌதம முனிவரிடம் சாபம் பெற்ற பல்லிகள்

பல்லி நம் மீது விழும் இடத்திற்கேற்ப தோஷங்கள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. நமக்கே தெரியாமல் பல்லி நம் மீது விழுந்தால், அந்தத் தோஷத்தில் இருந்து நம்மை எப்படி விடுவித்துக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்.

ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள் கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்தனர். ஒரு நாள் பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வரச் சென்றனர். அவர் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்ட முனிவர் பெரும் கோபம் அடைந்து இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டாராம்.

பின்னர், சிஷ்யர்கள் மனம் வருந்திக் கேட்டுக்கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு எனக் கூறி மறைந்தார் முனிவர். பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு பெருமாளிடம் மோட்சம் கேட்டனர். அவர்களின் சொல்லுக்கு செவி சாய்த்த வரதராஜ பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னைத் தரிசிக்க வருபவர்கள் உங்களைத் தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும் என்று கூறி சூரியன் சந்திரன் இதற்குச் சாட்சி என்று மோட்சம் அளித்தாராம்.

ஆகையால், காஞ்சிபுரம், அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள தங்க பல்லி, வெள்ளி பல்லியை தரிசித்தால் நம் மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோஷங்கள், கிரகண தோஷங்கள் விலகும் எனபது ஐதீகம்.

மேலும், நினைத்த காரியம் கைகூடும். புத்திரதோஷம் உள்ளவர்கள் திங்கள் கிழமையில் வரும் அமாவாசை அன்று ஆலய விருக்ஷத்தைச் சுற்றி வந்து, பெருமாளைத் தரிசித்தால் தோஷம் நீங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com