கச்சபேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி வருண யாகம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
கச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை.
கச்சபேஸ்வரர் கோயில் குளத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜை.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த யாகத்தில் அதிமுக மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் கணேசன் முன்னிலை வகித்தார்.
தமிழகம் முழுவதும் கடுமையான வெயிலின் தாக்கத்தால், தண்ணீர் பற்றக்குறை ஏற்பட்டு, மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வருணயாகம் நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில், ஓதுவார்கள் குளத்தில் இறங்கி மந்திரம் ஓதி, வருண பகவானை வணங்கினர்.
பின்னர், கோயில் வளாகத்தில் உள்ள வாரியார் அரங்கத்தில் சிறப்பு யாக சாலை ஏற்படுத்தப்பட்டு யாகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலிதிருநாவுக்கரசு, முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், கோயில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com