கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் மே 31 - இல் தொடக்கம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வரும் 31-ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் மே 31 - இல் தொடக்கம்

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வரும் 31-ஆம் தேதி பிரம்மோற்சவம் தொடங்குகிறது.
திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயில் உள்ளது. ஏழுமலையானின் அண்ணனாகக் கருதப்படும் கோவிந்தராஜ சுவாமிக்கு வரும் 31-ஆம் தேதி முதல் ஜூன் 8-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
இதற்காக வரும் 29-ஆம் தேதி கோயில் முழுவதையும் சுத்தம் செய்யும் கோயில் ஆழ்வார் திருமஞ்சனமும், 30-ஆம் தேதி மாலை அங்குரார்ப்பணம் எனும் முளைவிடுதல் உற்சவமும் நடைபெற உள்ளது.
பிரம்மோற்சவ நாள்களில் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் கோவிந்தராஜ சுவாமி தன் உபய நாச்சியார்களுடன் மாடவீதியில் வலம் வர உள்ளார். வாகன சேவையின்போது கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
விழா நாள்களில் கோயிலில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

பிரம்மோற்சவ வாகன சேவை விவரம்
தேதி காலை இரவு
31-05-2017 கொடியேற்றம் பெரிய சேஷ வாகனம்
1-06-17 சின்னசேஷம் அன்னப் பறவை
2-06-17 சிம்மம் முத்துப் பந்தல்
3-06-17 கல்பவிருட்சம் சர்வ பூபாலம்
4-06-17 மோகினி அவதாரம் கருட சேவை
5-06-17 அனுமந்த வாகனம் யானை வாகனம்
6-06-17 சூரிய பிரபை சந்திர பிரபை
7-06-17 தேரோட்டம் குதிரை
8-06-17 தீர்த்தவாரி தங்கப் பல்லக்கு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com