வீரராகவ பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம்

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
மழைவேண்டி, வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் நடைபெற்ற சிறப்பு வருண ஜெபம்.
மழைவேண்டி, வீரராகவ பெருமாள் கோயில் குளத்தில் நடைபெற்ற சிறப்பு வருண ஜெபம்.

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் கடுமையான கோடை வெயில் காரணமாக வறட்சி ஏற்பட்டு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆங்காங்கே குடிநீர் பிரச்னை நிலவி வருகிறது. இதையொட்டி, தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின்பேரில், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து வருண யாகம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் வருண யாகம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேலும், கோயில் வளாகத்தில் உள்ள கருடாழ்வார் சந்நிதி, கோயில் குளத்தில் வேத விற்பன்னர்கள் காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, வேதம் ஓதி சிறப்பு யாக பூஜை செய்தனர். இதில் பக்தர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com