100 கிலோ தங்கத்தில் உடுப்பி கிருஷ்ணர் கோயில் கர்ப்பகிரஹ விமானம் நிர்மாணப் பணி

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் தங்க கோபுர நிர்மாணத் திருப்பணி நடைபெறவுள்ளன.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோயில் தங்க கோபுர நிர்மாணத் திருப்பணி நடைபெறவுள்ளன.
உடுப்பி ஸ்ரீபலிமாரு மடாதிபதி ஸ்ரீஸ்ரீ வித்யாதீஷ தீர்த்த ஸ்ரீபாதங்கள் இந்தியா முழுவதும் யாத்திரை செய்து வருகிறார். சென்னை வந்துள்ள அவர் நவம்பர் 25-ஆம் தேதி வரை சென்னையில் உள்ள ஸ்ரீராகவேந்திர மடங்களுக்கு சென்று ஆன்மீக சொற்பொழிவு செய்து நிதி திரட்டுகிறார்.
கோயில் கர்ப்பகிரஹ விமானம் ஒரு சதுரஅடிக்கு 40 கிராம் தங்கம் வீதம் சுமார் 2,500 சதுர அடி உள்ள விமானத்திற்கு தங்க தகடுகளை வேயும் பணி 100 கிலோ தங்கத்தைக் கொண்டு ரூ. 32 கோடி செலவில் மேற்கொள்ளப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com