கபிலதீர்த்தத்தில் கணபதி ஹோமம் தொடக்கம்

திருப்பதி கபிலதீர்த்தத்தில் சனிக்கிழமை கணபதி ஹோமம் விமரிசையாக தொடங்கியது.
கணபதி ஹோமத்தின்போது, பூஜை செய்த அர்ச்சகர்.
கணபதி ஹோமத்தின்போது, பூஜை செய்த அர்ச்சகர்.

திருப்பதி கபிலதீர்த்தத்தில் சனிக்கிழமை கணபதி ஹோமம் விமரிசையாக தொடங்கியது.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான கபிலேஸ்வர சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் முழுவதும் ஹோமங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் ஹோம மகோற்சவம் தொடங்கியது.
இதற்காக கோயில் முன் ஏற்படுத்தப்பட்டுள்ள மண்டபத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்து, சிறப்பு மலர் அலங்காரம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, கலசஸ்தாபனம் செய்யப்பட்டு கணபதியை ஆவாஹனம் செய்து வேதபண்டிதர்கள் ஹோமத்தை தொடங்கினர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஹோமம் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com