காவிரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு குடந்தையில் காவிரி அம்மன் சிலை பிரதிஷ்டை

கும்பகோணத்தில் செப். 19ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் காவிரி அம்மன் சிலை சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் செப். 19ஆம் தேதி நடைபெற உள்ள காவிரி மஹா புஷ்கரம் விழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் காவிரி அம்மன் சிலை சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது நடத்தப்படும் விழா காவிரி புஷ்கரம். இதன்படி 12 குரு பெயர்ச்சியைக் கடந்து 144 ஆண்டுக்குப் பிறகு வரும் இப்புஷ்கரம் மஹா புஷ்கரம் ஆகும். இவ்விழா சோழ, நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இடையில் நின்று போன இவ்விழாவை மீண்டும் நடத்த வேண்டுமென அகில பாரத துறவியர்கள் சங்கத்தினர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தற்போது மகா புஷ்கரம் விழா குடகு முதல் பூம்புகார் வரை கடந்த 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 
கும்பகோணத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் வழிபாட்டுக்காக கும்பகோணம், சாரங்கபாணி கீழவீதி திரெüபதி அம்மன் கோயில் முன்புறம் காவிரி அம்மன் சிலை பிரதிஷ்டை சனிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. மூன்று நாட்கள் பொதுமக்களின் வழிபாட்டுக்குப் பின்னர் வரும் 19ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் காவிரி அம்மன் ரதம் புறப்பாடு நடைபெறும். ரதம் முக்கியவீதிகள் வழியாக வலம் வந்து பகவத் படித்துறையை அடையும். அங்கு பல்வேறு காய், கனிகளால் அலங்கரிக்கப்பட்ட பீடத்தின் மீது காவிரி அம்மன் தரிசன காட்சி நடைபெறும். இதையடுத்து அன்று அதிகாலை முதல் பக்தர்கள் புனிதநீராடும் நிகழ்வும், மாலை அன்னை காவிரிக்கு ஆரத்தி வழிபாடும் நடைபெற உள்ளது. 
ஏற்பாடுகளை தென்பாரத கும்பமேளா கும்பகோணம் மகாமக அறக்கட்டளை குழுவினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com