திருமலையில் வாகனங்களை நிறுத்த பிரத்யேக செயலி வெளியீடு

திருமலையில் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை எளிதாக நிறுத்துவதற்கு பிரத்யேக செயலியை திருமலை - திருப்பதி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
திருமலையில் வாகனங்களை நிறுத்த பிரத்யேக செயலி வெளியீடு

திருமலையில் பக்தர்கள் நான்கு சக்கர வாகனங்களை எளிதாக நிறுத்துவதற்கு பிரத்யேக செயலியை திருமலை - திருப்பதி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
திருமலையில் சனிக்கிழமை (செப்டம்பர் 23) வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குகிறது. பிரம்மோற்சவ வாகன சேவையை காண புரோட்டோகால் விஐபிக்கள் திருமலைக்கு அதிக அளவில் வருவர். அதனால் திருமலைக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். 
எனவே, தேவஸ்தானம், திருமலை - திருப்பதி காவல்துறை உதவியுடன் திருமலையில் வாகன நிறுத்த இடங்களை ஏற்படுத்தி உள்ளது.
இப்பகுதிகளை எளிதாக அறியும் வகையில் தேவஸ்தானம் 'கூகுள் பிளே ஸ்டோர்' உதவியுடன் 'பிரம்மோற்சவம் பார்க்கிங் ட்ராக்கர்' என்ற செயலி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. 
திருமலைக்கு நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், இந்த செயலியை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். 
அதில், திருமலையில் உள்ள வாகன நிறுத்த இடங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றில், காலியாக உள்ள இடங்களின் விவரம் தெரிய வரும். 
அதன்படி, பக்தர்கள் தங்களது வாகனங்ளை எளிதாக நிறுத்தி கொள்ள முடியும். இந்த செயலி சனிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
பிரம்மோற்சவம் முடியும் வரை நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த, திருமலையில் இந்த நடைமுறையே பின்பற்றப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
வாகன நிறுத்தத்துக்கான செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com