இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (எப்ரல் 6 - ஏப்ரல் 12) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன்பெறுவோம். 
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கு? வாங்க பார்க்கலாம்!

12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (எப்ரல் 6 - ஏப்ரல் 12) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பயன்பெறுவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

திட்டமிட்ட வேலைகளை குறித்த காலத்திற்குள் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். சிறப்பான வாரம். நண்பர்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவீர்கள். முதுகுக்குப்பின்னால் குறைசொல்பவர்களைக் கண்டு கொள்ள வேண்டாம். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்களை நம்பி உங்கள் வேலைகளை ஒப்படைக்க வேண்டாம். வியாபாரிகளின் முயற்சிகள் அனைத்தும் சீரிய முறையில் வெற்றிகளைத் தேடித்தரும். வங்கிக் கடன் வாங்கி தொழிலை சீரமைப்பீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகளால் லாபம் கிடைக்காது. 

அரசியல்வாதிகள் உட்கட்சிப் பூசலினால் கவலையடைந்தாலும் தொண்டர்களை சாந்தப்படுத்தி சமாளிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களை விரைவில் முடித்துக்கொடுத்து வருமானம் பெறுவீர்கள். பெண்மணிகள் பொருளாதாரத்தில் அபிவிருத்தியைக் காண்பீர்கள். உங்கள் கோரிக்கைகளை குடும்பத்தில் அனைவரும் ஏற்றுக்கொள்வர். மாணவமணிகள் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: ஸ்ரீ ராமபிரானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

சமூகத்தில் பெயரும் புகழும் அதிகரிக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். சுறுசுறுப்பாலும் விடாமுயற்சியாலும் வெற்றிவாகை சூடுவீர்கள். குடும்பத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். செய்கின்ற வேலைகளில் சிறுசிறு குறைகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு வியாபாரம் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தாற்போல் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்னைதள் தோன்றி மறையும். கட்சித் தலைமையிடம் மோதல் போக்கைத் தவிர்க்கவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த புகழும் பாராட்டும் கிடைக்கத் தாமதமாகும். பெண்மணிகளுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: மஹாலட்சுமியை தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 10. 

சந்திராஷ்டமம்: 6, 7, 8.

{pagination-pagination}


மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

துன்பங்கள் குறைந்து இன்பங்கள் படிப்படியாக வளரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சனிபகவானும் வக்கிரம் பெற்ற குருபகவானும் உங்களின் செல்வம், செல்வாக்கு இரண்டையும் உயர்த்துவார்.  

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை குறித்த காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களுக்கு உதவிகரமாக இருப்பீர்கள். வியாபாரிகள் எதிலும் கவனத்துடன் ஈடுபட்டால் வருமானத்தை அள்ளலாம். உங்கள் பொருள்களை சந்தையில் விற்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பலனளிக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். ஆனாலும் பயிர்களில் பூச்சிகளின் பாதிப்பு உண்டாக வாய்ப்புண்டு. 

அரசியல்வாதிகள் பேச்சில் கவனம் தேவை. மேலிடத்திற்கு தகவல் அனுப்பும்போது எச்சரிக்கை தேவை. கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை சிறப்பாக முடித்துக்கொடுப்பர். புதிய ஒப்பந்தங்களையும் பெறுவர். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் கடுமையாக முயற்சி செய்து கல்வியில் முன்னேறுவீர்கள். 

பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 8. 

சந்திராஷ்டமம்: 9,10,11.

{pagination-pagination}


கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

தர்ம சிந்தனைகள் மேலோங்கும். திட்டமிட்ட காரியங்களை சரியாகச் செய்து முடிப்பீர்கள். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவீர்கள். தந்தை வழி உறவினர்களிடம் உதவிகள் கிடைக்கும். உங்கள் ஆற்றல் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். 

உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைக்க முயற்சி செய்யவும். வேலைகளைத் தள்ளிப்போட வேண்டாம். வியாபாரிகள் வீண் ஆசாபாசங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். திட்டமிட்ட வேலைகளையும் ஒத்திப்போடவும். விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கொட்டும். இன்னும் முயற்சி செய்து கூடுதல் விளைச்சலுக்கு வித்திடுவீர்கள். 

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். உங்கள் கோரிக்கைகளைத் தலைமையிடம் கூறிவிட்டு அமைதியாக இருக்கவும். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணவரவும் தாமதமாகும். பெண்மணிகளுக்கு நல்லது கெட்டது இரண்டும் கலந்து வரும்.  மாணவமணிகளின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். வீர தீர விளையாட்டுகளிலும் நீங்கள் ஈடுபடலாம். 

பரிகாரம்: குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 8. 

சந்திராஷ்டமம்: 12.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உழைப்பை அதிகரித்துக் கொள்வீர்கள். புதிய அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத நிகழ்ச்சி ஒன்று நடந்து உங்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்யும். சிலருக்கு வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை உயரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். இதனால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நல்ல பலன்களைத் தரும். வியாபாரிகள் சந்தைகளை நாடிச் செல்வீர்கள். நண்பர்களின் உதவியுடன் புதிய முதலீடுகளில் நல்ல லாபத்தை அள்ளுவீர்கள். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். 

அரசியல்வாதிகள் எத்தகைய சிக்கலான சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்து மீண்டு வந்து விடுவீர்கள். மாற்றுக் கட்சியினரிடம் மனம் திறந்து பேசவேண்டாம்.

கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களை நாடிவரும். பெண்மணிகள் கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். மாணவமணிகள் அதிக மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: அம்பாளை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அவர்களால் நல்வழியைத் தெரிந்து கொள்வீர்கள். கடன்தொல்லைகள் குறையும். எதிர்காலத்திற்குத் திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய சக்தியுடனும் யுக்தியுடனும் எதிரிகளை முறியடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவல ரீதியான பயணங்களைத் தள்ளிப்போடவும். சக ஊழியர்களின் ஆதரவுடன் வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்வீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் பெருகும். புதிய நிலங்களை வாங்க இது உகந்த நேரம். 

அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்புகள் தோன்றினாலும் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாது. கட்சித் தலைமையை கவர முயற்சிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களின் ஆதரவு பெருகும். பெண்மணிகளுக்கு சற்று குழப்பமான நிலைமை தென்படும். கணவரிடம் மனம் திறந்து பேசுவதைக் குறைப்பது நல்லது. 

மாணவமணிகளுக்கு படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 7, 9.

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}


துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

புதிய பொறுப்புகளைத் திறம்படச் செய்து நற்பெயர் வாங்குவீர்கள். மன உறுதியுடன் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புகள் நன்மை தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். 

உத்தியோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க நேரிடும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்ய நேரிடலாம். வியாபாரிகள் வரவு செலவு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தேவைக்கேற்ப சரக்குகளை வாங்கி விற்பனை செய்யவும். விவசாயிகளுக்கு கொள் முதல் லாபம் அதிகரிக்கும். நீர்ப்பாசன வசதிகளால் மகசூல் உயரும். பூச்சிக்கொல்லிகளுக்கான செலவுகள் குறையும். 

அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அனைவரையும் திருப்திபடுத்தும். கடினமான வேலைகளையும் வெற்றிகரமாக முடித்து புதிய பொறுப்பு பெறுவீர்கள். பயணங்களால் அனுகூலம் அடைவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள்.

ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றபடி உங்கள் செயல்பாடு இருக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். தந்தைவழி உறவுகளில் கவனம் தேவை. மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். 

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 6, 9. சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

உங்கள் நீண்டகால எண்ணங்கள் ஈடேறும். கடினமான உழைப்புக்குப் பிறகே வெற்றி உங்களைத் தேடி வரும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்கவும். சிறுசிறு தொல்லைகள் கொடுத்து வந்த நண்பர்கள் அடங்கி விடுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்கள் தடைபட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிவாகை சூடுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சுமாராகவே இருக்கும். புதிய வாடிக்கையாளர்களைத் தேடிச் சென்று லாபத்தைப் பெருக்க முனைவீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வளத்தால் மகசூலைப் பெருக்கிக் கொள்வீர்கள். 

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தில் சாதகமற்ற சூழ்நிலை நிலவுவதால் அவர்களின் கண்களில் படாமல் அமைதியாகச் செயல்படவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களால் மன நிம்மதி அடைவீர்கள். நடன கலைஞர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக அமையும். பெண்மணிகள் ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். கணவரிடம் அன்போடு நடந்து கொள்வீர்கள். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது. 

அனுகூலமான தினங்கள்: 7, 10.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏறப்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். உற்றார் உறவினர்களும் நண்பர்களும் அன்போடு இருப்பர். எடுத்த காரியங்களைச் செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து கௌரவம் உயரும். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அவற்றை முடிக்கக் கூடுதலான காலஅவகாசம் கிடைக்கும். மேலதிகாரிகள் அனுசரனையாக இருப்பார்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்திய பிறகே புதிய குத்தகைகளை எடுக்கவும். 

அரசியல்வாதிகள் கட்சியில் பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் சேவையினால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். கலைத்துறையினருக்கு முயற்சிகளுக்குப் பிறகே ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகள் புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். 

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

கவலைகள் மறைந்து இன்பங்கள் பெருகும். உங்களின் மதிப்பு மரியாதை உயரும். விலகி இருந்த பழைய உறவினர்கள் திரும்பவும் நட்புப் பாராட்டுவார்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களும் உங்கள் பேச்சைக் கேட்பார்கள்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவீர்கள். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் யுக்தியுடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்குவர். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் உண்டு. விவசாயிகளுக்கு லாபமும் நஷ்டமும் மாறிமாறி வரும். கால்நடைகளால் வருமானம் உண்டு.

அரசியல்வாதிகளுக்கு பெயரும் புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினர் வருமானம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். எழுத்தாளர்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் பெறுவர். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகளுக்கு இது குதூகலமான வாரம். விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 10,11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் நீங்கும். இருப்பினும் சிக்கனத்தை கடைபிடிக்கவும். சட்டத் துறையைச் சார்ந்தவர்கள் கவனத்துடன் செயலாற்றவும். உற்றார் உறவினர்களுடனான கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களை நம்பி எதையும் செய்ய வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். புதிய முதலீடுகளுக்கான முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். உழைப்பிற்கேற்ற லாபம்
கிடைக்கும்.  

அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதில் கவனம் செலுத்தவும். கட்சி மேலிடத்தை அனுசரித்து நடந்து கொள்ளவும். கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும். உங்களின் செயல்கள் அனைத்தும் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். பெண்மணிகளுக்கு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் ஒற்றுமை
அதிகரிக்கும். மாணவமணிகள் ஆசிரியரின் சொல்படி நடக்கவும். 

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு சிறப்படையுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 8, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி நிறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களால் லாபம் அடைவீர்கள். ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தோரின் உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் சிறிய அளவு முயற்சிகளிலும் நல்ல பலனைக் காண்பீர்கள்.. வருமானம் சீராக இருக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாக இருக்கும். தொழிலில் புதிய யுக்தியைப் புகுத்துவீர்கள். விவசாயிகளுக்கு தொட்டது எல்லாம் துலங்கும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள்.  

அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப்பெறுவீர்கள். அதை அனுபவிக்க இயலாத வகையில் சில குறுக்கீடுகள் தோன்றும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்து கொள்வதில் சிரமங்கள் உண்டாகும். பெண்மணிகள் கணவரிடம் நல்லபடி நடந்து கொள்ளவும். அனைத்து விஷயங்களிலும் குடும்பத்தினரை ஆலோசித்துச் செய்யவும். மாணவமணிகள் இடையூறுகளை சாதுர்யமாகச் சமாளிப்பார்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 9, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com