ராமானுஜருக்கு கந்தப்பொடி வசந்தம்

ராமானுஜரின் 1001ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கந்தப்பொடி வசந்தத்துடன் நிறைவடைந்தது. இதில் பக்தர்கள் கந்தப்பொடியைத் தூவி கொண்டாடினர்.
ராமானுஜருக்கு கந்தப்பொடி வசந்தம்

ராமானுஜரின் 1001ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கந்தப்பொடி வசந்தத்துடன் நிறைவடைந்தது. இதில் பக்தர்கள் கந்தப்பொடியைத் தூவி கொண்டாடினர்.
 வைணவ குருவான ராமானுஜர், ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்தார். அவரது 1001ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா, இங்குள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி கோயிலில் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.
 இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து சாத்துமுறை திருவிழா கடந்த 21ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ராமானுஜரை வழிபட்டுச் சென்றனர்.
 இவ்விழாவின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை, சாத்துமுறை தீர்த்தம், கந்தப்பொடி வசந்தம், சுவாமி புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. இதில் ராமானுஜர் மீது பக்தர்கள் கந்தப்பொடி தூவியதோடு, தங்கள் மீதும் கந்தப்பொடி எனும் மஞ்சள் பொடியைத் தூவி கொண்டாடினர்.
 முன்னதாக 108 திவ்யதேசங்களின் சார்பாக ராமானுஜருக்கு திருமாலை, திருப்பரிவட்டம் வழங்கி மேள தாளத்துடன் மரியாதை செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ராமானுஜர்ஆண்டாள் சன்னதியை சென்றடைந்தார்.
 இரவு ஆண்டாள் சன்னதியில் இருந்து சுவாமி புறப்பாடும், நள்ளிரவு ராமானுஜர் மஞ்சத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
 இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து அவதாரத் திருவிழா நிறைவு பெறுகிறது. அதன் பின் திங்கள்கிழமை முதல் வரும் 26ஆம் தேதி வரை தெப்பத் திருவிழா நடைபெறும்.
 வரும் 29இல் ஆதிகேசவப் பெருமாள் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள்கள் நடைபெறும். பிரம்மோற்சவ விழாவின் 7ஆம் நாளான மே மாதம் 5ஆம் தேதி தேர்த் திருவிழா நடைபெறும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com