பெண்களே இதைப் படிக்க வேண்டாம்! வெறும் 20 கிலோ நகையுடன் உலா வரும் கோல்டன் பாபா

பெண்களே இதைப் படிக்க வேண்டாம்! வெறும் 20 கிலோ நகையுடன் உலா வரும் கோல்டன் பாபா

கன்வர் யாத்திரை இன்று தொடங்கியுள்ளதை அடுத்து கோல்டன் பாபா 20 கிலோ தங்க நகைகளை..

ஹரித்துவார்: கன்வர் யாத்திரை இன்று தொடங்கியுள்ளதை அடுத்து கோல்டன் பாபா 20 கிலோ தங்க நகைகளை அணிந்து யாத்திரை வந்த தகவல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

கன்வர் யாத்திரை இன்று தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சிவ பக்தர்கள் கன்வர் யாத்திரை என்ற பெயரில் பாபா தாமில் உள்ள பைத்யாநாத் ஜோதிர்லிங்கம் கோயிலுக்கு யாத்திரை செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டுக்கான கன்வர் யாத்திரை இன்று தொடங்கியதையடுத்து, உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 56 வயதாகும் கோல்டன் பாபா என்கிற சாமியார் 20 கிலோ எடையுள்ள தங்க ஆபரணங்களை 
அணிந்துகொண்டு தனது 25-வது கன்வர் யாத்திரையில் பங்கேற்கிறார். 

ஹரித்வாரிலிருந்து தில்லி வரை நடைபெறும் இந்த யாத்திரையில் சிவபக்தரான சுதிர் மக்காரார் என்கிற கோல்டன் பாபா ஆண்டுதோறும் தங்க ஆபரணங்களை அணிந்துகொண்டு யாத்ராவில் கலந்துகொள்வார். 

இவர் தொழிலதிபராக இருந்து சாமியாராக மாறியவர். தனது 25-வது யாத்திரையுடன் தனது யாத்திரை பயணத்தை இவர் முடித்துக்கொள்ள போவதாகக் கூறினார். சில கிராம் கணக்கில் தங்கம் அணிந்துவந்த நான் போலோ நாத்(சிவபெருமானின்) கிருபையால் தற்போது கிலோ கணக்கில் தங்க ஆபரணங்கள் அணிந்து வருகிறேன் என்று அவர் கூறியுள்ளார். 

இவர் மொத்தம் ஆறு கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ தங்க நகைகளை அணிந்துள்ளதால் பாதுகாப்பு கருதி துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் அவருடன் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com