உங்கள் ராசி எது? ஆகஸ்ட் மாதப்படி உங்கள் பலம், பலவீனம்

உங்கள் ராசி எது? ஆகஸ்ட் மாதப்படி உங்கள் பலம், பலவீனம்

12 ராசிக்காரர்களுக்குமான ஆகஸ்ட் மாத பொது ராசி பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன்

12 ராசிக்காரர்களுக்குமான ஆகஸ்ட் மாத பொது ராசி பலன்களை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம். 

மேஷம்:

பலம்: சுபநிகழ்வு நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி

பலவீனம்: தொழிலில் சிறு சிக்கல், உத்தியோகத்தில் பணிச்சுமை

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று நவக்கிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தைத் தரும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 19, 20
அதிர்ஷ்ட தினங்கள்: 12, 13

{pagination-pagination}


ரிஷபம்:

பலம்: உழைப்பிற்கேற்ற அங்கீகாரம், பணவரவு

பலவீனம்: உடல் ஆரோக்கியத்தில் சிக்கல், பேச்சில் தடுமாற்றம்.

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 21, 22, 23
அதிர்ஷ்ட தினங்கள்: 14, 15, 16

{pagination-pagination}


மிதுனம்:

பலம்: வாக்கு வன்மை அதிகரிக்கும். தனவரவு உண்டு. வீடு மனை வாகன பாக்கியம் கிட்டும்.

பலவீனம்: உடற் சோர்வு, மனதில் வீண் பயம்.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்கத் திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: 17, 18

{pagination-pagination}


கடகம்:

பலம்: எடுத்த முயற்சிகள் நல்லபடியாக முடியும். சொத்து சேர்க்கை உண்டு.

பலவீனம்: எதிலும் அவசரம், கடன் சுமை அதிகரிப்பு

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லாக் காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 26, 27, 28
அதிர்ஷ்ட தினங்கள்: 19, 20

{pagination-pagination}

சிம்மம்:

பலம்: சுபவிரையம் - தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

பலவீனம்: குடும்பத்தினர், குழந்தைகளுடன் கருத்து மோதல்

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்கப் பிரச்சனைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 3, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: 21, 22, 23

{pagination-pagination}

கன்னி:

பலம்: பணவரவு, குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்குதல்

பலவீனம்: தொழிலில் - உத்தியோகத்தில் அதிக சுமை

பரிகாரம்: குலதெய்வத்தினை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். 

அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25

{pagination-pagination}

துலாம்:

பலம்: பணவரவு, செயலில் முன்னேற்றம்

பலவீனம்: சிறு சிறு தடைகள்

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சனை தீரும். மன நிம்மதி 

கிடைக்கும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27, 28

{pagination-pagination}

விருச்சிகம்:

பலம்: புதிய வீடு மனை வாங்குதல் - தைரியம் அதிகரித்தல்

பலவீனம்: சகோதர சகோதரிகளிடம் வீண் வாக்குவாதம், பணம் சார்ந்த விஷயங்களில் கவனம்.

பரிகாரம்: திருமுருகாற்றுப்படையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் 

கண்டபிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 8, 9
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 3, 29, 30

{pagination-pagination}

தனுசு:

பலம்: வேலைகளில் சுறுசுறுப்பு - குடும்பத்தில் மகிழ்ச்சி

பலவீனம்: பண நெருக்கடி - நேரம் தவறிடுதல்

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்ப்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர 

எல்லா நன்மைகளும் உண்டாகும். 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: 4, 5, 31

{pagination-pagination}

மகரம்:

பலம்: புதிய வீடு மனை பாக்கியம் கிடைத்தல் - தொழிலில் ஏற்றம்

பலவீனம்: செயல்களில் பதற்றம் - ஆரோக்கியத்தில் குறைபாடு

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். 

ஆரோக்கியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 12, 13
அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7

{pagination-pagination}

கும்பம்:

பலம்: சுபநிகழ்ச்சிகள் இருந்த தொய்வு நீங்குதல் - முயற்சிகளில் வெற்றி

பலவீனம்: வாக்கு கொடுக்கும் போது கவனம் தேவை - மனம் ஒருமுகபடாமை

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய 

தடைகளைப் போக்கும். நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: 14, 15, 16
அதிர்ஷ்ட தினங்கள்: 8, 9

{pagination-pagination}

மீனம்:

பலம்: குடும்பத்தில் மகிழ்ச்சி - புதிய சொத்துக்கள் சேருதல்

பலவீனம்: எடுக்கும் காரியங்களில் அதிக கவனம் தேவை - குழந்தைகளில் நலனில் அக்கறை தேவை

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடச் செல்வம் சேரும். 

கல்வியில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: 10, 11
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com