இன்று நாக சதுர்த்தி: இதைச் செய்ய மறக்காதீங்க! 

நாக சதுர்த்தி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். 
இன்று நாக சதுர்த்தி: இதைச் செய்ய மறக்காதீங்க! 


நாக சதுர்த்தி இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாக சதுர்த்தி நாளாகும். 

ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறை நான்காம் நாளாகிய சதுர்த்தியிலும் ஐந்தாம் நாளாகிய பஞ்சமியிலும் நாக சதுர்த்தி வருகின்றன. 

பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் இந்நாளில் தம்பிட்டு என்னும் உணவுப்பொருளைத் தயார் செய்து இறைவனுக்குப் படைக்கின்றார்கள். 

பகவான் அனந்தம் என்னும் நாகமாக இருந்து பூமியைக் காத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாகத் தட்சகன், வாசுகி, கார்க்கோடகன் முதலான நாகங்களும் வசிக்கின்றனர். 

நாக சதுர்த்தி அனுஷ்டிப்பதால் ஏற்படும் பலன்கள்

ராகு, கேது தோஷங்களால் திருமணம் கைகூடாதவர்கள் நாக சதுர்த்தியான இன்று நாகரை வழிபாடு செய்யலாம். திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் விருத்தியாகவும் இந்த வழிபாட்டை மேற்கொள்கின்றனர். 

நாகப்பிரதிகளுக்கு புதுத்துணி கட்டி பாலால் அபிஷேகம் செய்யலாம். அருகிலுள்ள நீர் நிலைகளிலிருந்து நீரெடுத்து வந்து அபிஷேகம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு வழிபடலாம். 

புத்திரப்பேறு உண்டாக நாகப் பிரதிஷ்டை செய்யும்படி சாஸ்திரம் கூறுகிறது.  இது அனைவராலும் முடியாது என்பதால், இன்றைய தினம் அருகில் உள்ள பாம்புப் புற்றில் பால் வார்த்து, புஷ்பங்கள் சாத்தி, பழம் முதலிய நிவேதனங்களை படைத்து பூஜை செய்யலாம். 

நாக சதுர்த்தி நாளில் நாகர்கோவில், நாகராஜா கோயில், பரமக்குடி நயினார் கோயில், நாகப்பட்டினம் நாகநாதர் கோயில் மற்றும் கும்பகோணம் நாகநாதர் கோயில் போன்றவற்றில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com