கன்னியாகுமரி ஏழுமலையான் கோயிலில் அடுத்தாண்டு மகாசம்ப்ரோக்ஷணம்

கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயிலில் அடுத்தாண்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு கொண்டு வரப்படும் எனறு தேவஸ்தான செயல் அதிகாரி
கன்னியாகுமரி ஏழுமலையான் கோயிலில் அடுத்தாண்டு மகாசம்ப்ரோக்ஷணம்


கன்னியாகுமரியில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயிலில் அடுத்தாண்டு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு கொண்டு வரப்படும் எனறு தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் தெரிவித்தார்.
திருப்பதியில் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, தேசியக் கொடி ஏற்றிய அவர் நிகழ்ச்சியில் கூறியதாவது: ஏழுமலையான் கோயில் அனைத்து கைங்கரியங்கள் ஆகம விதிக்கு உள்பட்டு நடந்து வருகிறது. வைணவ கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா சம்ப்ரோக்ஷணம் செய்யும் வழக்கம் உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 16-ஆம் தேதி திருமலையில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. 
இந்தாண்டு திருமலையில் செப்டம்பர் 13 முதல் 21-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவமும், அக்டோபர் 10 முதல் 18-ஆம் தேதி வரை நவராத்திரி பிரம்மோற்சவமும் என இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற உள்ளன.
திருமலையில் மாஸ்டர் பிளான் திட்டத்தை ஒட்டி 3-ஆம் கட்ட வெளிவட்ட சுற்றுப்பாதை பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. திருமலையில் ரூ. 26 கோடியில் புதிய கழிப்பறைகள், ரூ. 23 கோடியில் தர்ம தரிசன பக்தர்களுக்கு புதிய வளாகம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஏழுமலையான் கோயிலுக்குள் புதிய உக்கிராணம் அமைக்கும் பணிகளும் தொடங்க உள்ளது.
திருமலையில் கூடுதலாக அன்னதான கவுன்ட்டர்களை ஏற்படுத்தி, பக்தர்களுக்கு 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை 1-ஆம் தேதி குருúக்ஷத்திரத்தில் ஏழுமலையான் கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தி, பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கன்னியாகுமரியில் ரூ. 22.5 கோடி மற்றும் ஹைதராபாதில் ரூ. 28 கோடியில் கட்டப்பட்டு வரும் ஏழுமலையான் கோயில்கள் அடுத்தாண்டு குடமுழுக்கு செய்து பக்தர்களின் வழிபாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதேபோல் ஆந்திராவின் தலைநகரான அமராவதியில் 25 ஏக்கர் பரப்பளவில் புதிய ஏழுமலையான் கோயில் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com