சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஆவணித் திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொங்கியது.
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி ஆவணித் திருவிழா: இன்று கொடியேற்றத்துடன் துவக்கம்

சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் இந்தாண்டுக்கான ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொங்கியது. 

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி எள்ளது. இந்தப் பதியில் ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி மற்றும் தை மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். 

இந்தாண்டு ஆவணித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆவணித் திருவிழா வருகிற 27-ம் தேதி வரை நடைபெறம். கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதல், திருநடை திறத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 

வருகிற 24-ம் தேதி 8-ம் திருவிழா நடைபெறுகிறது. அன்று மாலை 4 மணிக்கு அய்யா வைகுண்டசாமி வெள்ளைக் குதிரை வாகனத்தில் முத்திரி கிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும் 9-ம் நாள் அனுமன் வாகன பவனி, 10-ம் நாள் இந்திர வாகனத்தில் பவனியும் நடைபெறுகிறது. 

விழாவின் முக்கிய நிகழ்வான 27-ம் தேதி மதியம் 12 மணிக்குத் திருவிழா தேரோட்டம் நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com