யோகங்களை அருளும் யோக ஹயக்ரீவர்! 

ஹயக்ரீவப் பெருமாளின் மந்திர உபதேசம் பெற்று பல்வேறு கலைகளிலும் சிறந்தவராய் திகழ்ந்தவர்....
யோகங்களை அருளும் யோக ஹயக்ரீவர்! 

ஹயக்ரீவப் பெருமாளின் மந்திர உபதேசம் பெற்று பல்வேறு கலைகளிலும் சிறந்தவராய் திகழ்ந்தவர் சுவாமி தேசிகன். இவருக்கு மாமாவான அப்புள்ளார் மூலம் உபதேசம் பெற்றார். முன்னதாக, கருட மந்திர  உபதேசம் பெற்ற சுவாமி தேசிகன் கருடபகவானின் அனுக்கிரகத்தால் ஹயக்ரீவ உபாசகரானார். இவர்,  வடமொழியில் பல கிரந்தங்களையும் தமிழில் அருளிச் செய்துள்ளார்.

சுவாமி  தேசிகன், புரட்டாசி திருவோணத்தில் அவதரித்தவர். ஹயக்ரீவர் பெருமானின் திருநட்சத்திரமும் ஆவணி சிரவணமே. அதேபோன்று, மத்வ சம்பிரதாயத்தில் "சோதே' மடத்து வாதிராஜ சுவாமிகளும் சிறந்த ஹயக்ரீவ உபாசகர், இவர் தன் கையால் ஹயக்ரீவருக்கு ஆராதனை செய்து "ஹயக்ரீவ பிண்டி' என்ற நைவேத்தியம் செய்வார். இதை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தன் தலைமீது வைத்துக் கொள்வார். ஹயக்ரீவர் குதிரை வடிவம் கொண்டு தன் முன் இரண்டு கால்களை வாதிராஜ சுவாமிகளின் தோள்களில் வைத்துக்கொண்டு அந்த பிரசாதத்தை உண்பார். மீதம் இருப்பதையே பிரசாதமாகக் கொண்டு விடுவார் வாதிராஜ சுவாமிகள். 

ஹயக்ரீவரை திருமால் திருக்கோயில்களில் தனி சந்நிதியில் தரிசிக்கலாம். திருவஹிந்திபுரம் ஒளஸதகிரி மலையில் ஹயக்ரீவரின் சந்நிதி அமைந்துள்ளது. மேலும் தேவதைகள் சந்நிதியில் சுவாமி தேசிகனால் ஆராதிக்கப்பட்ட யோக ஹயக்ரீவரையும் தரிசிக்கலாம். செட்டி புண்ணியம் தலத்திலும் (செங்கற்பட்டு) அருகில் யோக ஹயக்ரீவரை தரிசிக்கலாம். இன்னும் பல தலங்களிலும் ஹயக்ரீவர் சந்நிதி கொண்டருள்கின்றார்.


26.08.2018 - ஸ்ரீஹயக்ரீவர் ஜெயந்தி திருநாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com