நிதானத்தைத் தராசு போல் கடைப்பிடிக்கும் துலா ராசிக்காரர்களின் பொதுக் குணங்கள்!

ராசி மண்டலத்தின் நடுவில் உள்ளது துலாராசி. துலா ராசிக்குரிய அடையாளம் தராசு.
நிதானத்தைத் தராசு போல் கடைப்பிடிக்கும் துலா ராசிக்காரர்களின் பொதுக் குணங்கள்!

ராசி மண்டலத்தின் நடுவில் உள்ளது துலாராசி. துலா ராசிக்குரிய அடையாளம் தராசு. அதாவது அந்த ராசி நேயர்கள் தங்களின் செயலிலும் எண்ணத்திலும் ஒரு நிதானத்தைத் தராசு போல் ஒரு சமஅளவைக் கடைப்பிடிப்பார்கள். 

வாயு ராசியான இதில் பிறந்தவர்கள் உணர்ச்சிக்கு அடிமையாகாமல் எதையும் நின்று நிதானித்துப் பார்த்துச் செயல்படுவார்கள். எந்தச் செயலையும் முன் அனுபவத்தின் அடிப்படையில் சீர்தூக்கிப் பார்ப்பது அந்த ராசி நேயர்களின் சிறப்பு. சில முக்கிய ராசிகளைப் போல இதிலும் அவசரக் குடுக்கைகள் காணப்படுவார்கள். ஆனால் காலப்போக்கில் ஏற்படும் அனுபவங்களைப் பொருந்து தாம் மேற்கொண்ட செயல் அல்லது தீர்மானம் சரியானதுதானா என்று யோசித்துப் பார்த்து, கடைசியில் சரியான முடிவுக்கு வருவார்கள். 

எதையுமே சம நோக்கோடு பார்க்கும் குணம் இயற்கையாக இந்த ராசி நேயர்களுக்கு அமைந்திப்பதால் ஒருவிதத் தனித்தன்மை இவர்களிடம் காணப்படும். அதனால் எங்கும் எதிலும் இந்த ராசிக்காரர்கள் நேசக்கரத்தை நீட்டி அன்பையே எதிர்பார்ப்பார்கள். தாம் மேற்கொள்ளும் செயல்களும் தீர்மானங்களும் தங்கள் மனத்துக்குச் சரியானவையாகப்படும் வரையில் தீர்க்கமாகச் சிந்திப்பார்கள். ஒருவிதப் பரபரப்பு அவர்களிடம் அதுவரை தென்படும். 

துலா ராசியின் ஆட்சிக்காரகன் சுக்கிரன் என்பதால் அவர்களின் பேச்சிலும் உடையிலும் ஒருவிதக் கவர்ச்சி இருக்கும். அன்பாகவும் எதையும் அப்படியே நம்புவதைப் போலவும் இவர்கள் செய்கையும் பேச்சும் இருக்கும். இவர்கள் பேச்சில் எதிரிகளைக்கூட இத்தனை நல்ல மனிதரிடம் நாம் பகைமை பாராட்டலாமா என்று யோசிக்க வைத்துவிடுவார்கள். 

ஒவ்வொரு ராசிக்கும் எதிரான ஏழாமிடத்து ராசிக்கு முதல் ராசியின் குணச் சிறப்புகளில் ஒரு பகுதி அமைகிறது. ஆன்மீக உணர்வு இந்த ராசி நேயர்களுக்கு ஓரளவுக்கு அமைந்திருக்கும். சூழ்நிலைக்கேற்பச் செயல்படும் குணம் இவர்களிடம் இயற்கையாகவே காணப்படும். நல்ல சூழ்நிலையில் இவர்கள் வாழ்ந்தால் பிறரால் குற்றங்குறை காணமுடியாத அளவுக்குச் செம்மையாக வாழ்ந்து காட்டுவார்கள். மேற்பார்வை இடும் பணியில் இவர்கள் சிறந்து விளங்குவார்கள். சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளையும் அலுவலகத்தில் ஏற்படும் பிரச்னைகளையும் அமைதியாகச் சிந்தித்துத் தீர்வு காணுவார்கள். 

சுக்கிரன் ஆட்சிக் கிரகமாகையால் சங்கீத இயக்குநர்களாகவும், நடன ஆசிரியர்களாவும் விளங்குவார்கள். அதிகமான ஓய்வை விரும்பித் தனிமையை நாடும் சுபாவமும் இவர்களிடம் காணப்படும்.  பிறர் தங்களை புகழும் அளவுக்கு நடந்துகொள்வார்கள். தாங்கள் இருக்குமிடத்தை மகிழ்ச்சி கரமானதாக மாற்றுவதில் கைதேர்ந்தவர்கள். 

இந்த ராசி நேயர்கள் கலைஞர்களாக இருந்தாலும் வேறு எங்குப் பணியாற்றினாலும் எண்ணங்களையும் செயல்களையும் தராசுமுனையில் எண்ணங்களையும் செயல்களையும் தராசுமுனையில் நிறுத்தி நேர்மையான முறையில் வெளிப்படுத்துவதே இவர்களின் சிறப்புக்குணம். இந்தக் குணம் இவர்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். 

சுக்கிரனைப்பற்றிச் சொல்லும்போது அழகு பொருந்திய ஆடை அணிகலன் அணிந்திருப்பார்கள், கறுத்த சுருண்ட கூந்தல் உடையவர்கள் என்றும் கொஞ்சம் ஸ்தூல சரீரம் பெற்றவர்கள் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்க்கையை நிதானத்துடனும், நேர்மையுடனும் கழிக்க விரும்பும் இந்த ராசி நேயர்கள் கலையுள்ளம் படைத்தவர்கள். நேர்மையான முறையில் வெளிப்படுத்துவதே இவர்களின் சிறப்புக்குணம். இந்தக் குணம் இவர்களிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். 

சுக்கிரனைப்பற்றிச் சொல்லும்போது அழகு பொருந்திய ஆடை அணிகலன் அணிந்திருப்பார்கள், கறுத்த சுருண்ட கூந்தல் உடையவர்கள் என்றும் கொஞ்சம் ஸ்தூல சரீரம் பெற்றவர்கள் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. வாழ்க்கையை நிதானத்துடனும், நேர்மையுடனும் கழிக்க விரும்பும் இந்த ராசி நேயர்கள் கலையுள்ளம் படைத்தவர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com