திருச்செந்தூரில் மாசித் திருவிழா கொடிப்பட்ட வீதியுலா: இன்று கொடியேற்றம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 20) அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற கொடிப்பட்ட வீதியுலா.
திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற கொடிப்பட்ட வீதியுலா.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை (பிப். 20) அதிகாலை 5.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, கொடிப்பட்ட வீதியுலா திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12ஆம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 4ஆம் படி செப்புப் படி ஸ்தலத்தார் மு. கோபாலகிருஷ்ணன் அய்யர், யானை மீது வைத்து கையில் ஏந்தியவாறு வீதியுலா வந்து கோயிலைச் சேர்தல் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி, கண்காணிப்பாளர்கள் ந. பத்மநாபன், ராஜ்மோகன், பிச்சையா உள்ளிட்ட கோயில் பணியாளர்கள், 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை அபிவிருத்தி சங்கத் தலைவர் வல்லநாடு தி. சிவராமலிங்கம், செயலர் ம. அய்யனார், பொருளாளர் பி. மாரியப்பன், திரிசுதந்திர சமுதாயத்தினர், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தெய்வானைக்கு பதில் சுந்தரி யானை: இக்கோயிலுக்குச் சொந்தமான தெய்வானை யானை இப்போது யானைகள் நல வாழ்வு சிறப்பு முகாமில் பங்கேற்கச் சென்றுள்ளது. இதனால், இத்திருவிழாவில் பங்கேற்க தனியாருக்குச் சொந்தமான சுந்தரி என்ற யானை வரவழைக்கப்பட்டுள்ளது. அதன் மீது வைத்து கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது.
கொடியேற்றம்: செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோயில் செப்புக் கொடிமரத்தில் திருவிழா கொடியேற்றப்படுகிறது. மாலையில் அருள்மிகு அப்பர் சுவாமிகள் கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு திருவீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவில் ஸ்ரீபெலி நாயகர் அஸ்திரத்தேவருடன் தந்தப் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை கோயில் தக்கார் இரா. கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பா. பாரதி, அலுவலகக் கண்காணிப்பாளர் யக்ஞ. நாராயணன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com