தென்னேரியில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகில் உள்ள தென்னேரி என்ற ஏர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்கிறது.
தென்னேரியில் தெப்பத்திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகில் உள்ள தென்னேரி என்ற ஏர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்கிறது. இவ்வூரின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள ஏரி திரையனேரி என அழைக்கப்பட்டு பின்னாளில் தென்னேரி என மக்களால் அழைக்கப்படுகிறது. இவ்வேரி இம்மடி குமார தாத்தாச்சாரியரால் சீரமைக்கப்பட்டு மதகுகள் கட்டி தாதசமுத்திரம் எனப் பெயரிடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டருளி அருள்புரியும் ஸ்ரீ தேவராஜசுவாமி என்னும் ஸ்ரீவரதராஜப்பெருமாள் இவ்வூருக்கு எழுந்தருளி - தாத சமுத்திரம் ஏரியில் தெப்பத் திருவிழா கண்டருளுகிறார். காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜசுவாமி என்னும் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் 93-வது ஆண்டு தெப்போற்சவ திருவிழா நடைபெற உள்ளது. 

தொண்டை மண்டலத்தின் தலைநகராகிய காஞ்சி மாநகரத்தில் பிரம்மாயாகத்தில் அவதரித்து பிரம்மாவுக்கு பிரத்தியக்ஷமான ஸ்ரீ தேவராஜசுவாமி என்னும் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் நாளது ஸ்ரீ ஹேவிளம்பி ஆண்டு மாசித் திங்கள் 13-ம் நாள் (25.02.2018) ஞாயிற்றுக்கிழமை காலை பிரசித்தி பெற்ற தென்னேரி மாநகரில் எழுந்தருளி, திருவீதி வலம் வந்து பிற்பகலில் திருமஞ்சனமும் ஆஸ்தானமும் மாலை தெப்ப உத்ஸவமும் இரவு தென்னேரி அகரம் திருவீதி வலமுகமாகப் பெரிய மஹோற்சவம் கண்டருளுகிறபடியால் பக்தர்கள் அனைவரும் இந்த மஹோற்சவத்தை உடன் கூடி அனுபவித்து அகமகிழ வேணுமாய் பிரார்த்திக்கின்றோம். 

மாசி மாதத்தில் சுக்லபட்ச தசமி நாளில் (25.02.2018) அன்று திருவிழா நடைபெறுகிறது. அந்நாளில் கிராமத்து மக்கள் அனைவரும் வரதராஜப் பெருமாளைக் கண்டு தரிசித்து அருள் பெறுகின்றனர். 

இத்தெப்பத்திருவிழாவினை தொன்றுதொட்டு இராஜரத்தின நாயுடு வகையராவைச் சேர்ந்த ஆர்.பாபுநாயுடு அவர்கள் சிறப்பாக நடத்தப்படுகிறது. இது 93-வது ஆண்டு தெப்போற்சவத் திருவிழாவாகும். 

25.02.2018 அன்று காலை தென்னேரிக்கு எழுந்தருளும் வரதராஜப்பெருமாள் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் பக்கத்து கிராமங்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். பின்னர் தென்னேரி வந்து அலங்காரம் கண்டு தெப்பத்தில் எழுந்தருளி மக்கள் அனைவரும் கண்டு மகிழ மூன்று சுற்று வருகிறார். பின்னர் தென்னேரி அகரம் சீனிவாசப் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளுகிறார். காலையில் மீண்டும் தென்னேரிக்கு எழுந்தருளி உபயதாரர்கள் மரியாதை செய்விக்கப் பெறுகிறது. 

பின்னர் மேனா பல்லக்கில் காஞ்சிபுரம் எழுந்தருளுகிறார். இப்வைபவம் ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுகிறது. 

25.02.2018 அன்று நடைபெறும் தென்னேரி தெப்பத்திருவிழாவில் காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாளைக் கண்டு மகிழ்ந்து அவனருள் பெறுவோம். 

தொடர்புக்கு 9445609155, 9943589194

தகவல் - எஸ். வெங்கட்ராமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com