மார்ச் 3-ல் மகான் ஸ்ரீ சிவன் சார் ஆராதனை

கிணற்றில் தண்ணீர் பொங்கிக் கொண்டு இருந்தது, தோட்டத்தில் பம்ப் செட்டில் தண்ணீர் ப்ரமாதமாக கொட்டிக் கொண்டிருந்தது.
மார்ச் 3-ல் மகான் ஸ்ரீ சிவன் சார் ஆராதனை

கிணற்றில் தண்ணீர் பொங்கிக் கொண்டு இருந்தது, தோட்டத்தில் பம்ப் செட்டில் தண்ணீர் ப்ரமாதமாக கொட்டிக் கொண்டிருந்தது. காவேரியில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டுக் கொண்டு இருந்தது. இந்த காட்சிகள் ஏதோ சில நூற்றாண்டுகளுக்கு முன் நடைப்பெற்றதல்ல சமிபத்தில், அதாவது 1960-களில், 1970-களில் சாதாரணமாக காணக்கூடியக் காட்சியாக இருந்தது. 

இது போன்றதோர் சந்தர்ப்பத்தில் தான் திருவெங்காட்டில், அகோரம் ஐயர் வீட்டில், ஸ்ரீ சிவன் சார் அமர்ந்து இருந்தார். எல்லா இடங்களிலேயும் தண்ணீர் கொட்டிக் கொண்டு இருந்தது. அப்பொழுது ஸ்ரீ சிவன் சார், அகோரம் ஐயரின் மூத்த மகனும் தன்னுடைய சிஷ்யனுமான சுப்பினியை கூப்பிட்டு சுப்பினி தண்ணீர் வீணாகக் கூடாது. 

ஒவ்வொரு வீட்டிலேயும் காசு கொடுத்து தண்ணீர் வாங்கற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்று சொன்னார். 

என்னடா இது, லூசுத்தனமாக இருக்கே! கிணத்தில் தண்ணீர் வழிகிறது. ஆற்றில் பரவாகமாக ஓடிக்கொடிருக்கிறது. பம்பு செட்டில் கொட்டுகிறது. எவனாவது காசு கொடுத்து தண்ணீர் வாங்குவானா என்பது தான் சுப்பினியின் மன எண்ண ஓட்டம். 

ஆனால் இன்று நாம் காண்பது என்ன? காசு இல்லா தண்ணீரை காண்பது அறிது என்பது நிதர்சனமாகிவிட்டது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தூர திருஷ்டியை கொண்ட மகான் ஸ்ரீசிவன் சார், இது போன்ற நடைமுறையில் வரக்கூடிய விஷயங்களையும், வாழ்க்கைக்கு அத்தியவசியமான யதார்த்த உண்மைகளையும் அருளியவர். தன்மையும் துறந்த துறவியான ஸ்ரீ சிவன் சார் அவர்களுடைய ஆராதனை நிகழ்ச்சியானது இந்த வருடம் மார்ச் 3-ம் தேதி சனிக்கிழமை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தில் முழுநாள் நிகழ்ச்சியாக காலையில் அபிஷேக ஆராதனைகளும் மாலையில் ஊர்வலத்துடனும் நடைபெற உள்ளது.

மேலும் சிறப்பு நிகழ்ச்சியாக மார்ச் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மைலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் அகாடமி ஹாலில் பிரம்மஸ்ரீ கணேஷ ஷர்மா மற்றும் ஸ்ரீ மகேஷ் வினாயகராம் குழுவினரின் சங்கீத சிவசாகரம் என்ற நிகழ்ச்சியும் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெற உள்ளது. அனைவரும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கும் நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் கலந்துகொண்டு ஸ்ரீ சிவன் சாரின் பேரருளை பெறுமாறு ப்ராத்திக்கின்றோம். 

மேலும் விவரங்களுக்கு 9600015230 மற்றும் 9840219314 என்ற கைபேசியில் தொடர்பு கொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com