இந்த வாரம் நன்மை அடையக்கூடிய ராசிக்காரர்கள் யார் யார்?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (பிப்ரவரி 23 - மார்ச் 1) பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார் படித்து பயன் பெறுங்கள்.
இந்த வாரம் நன்மை அடையக்கூடிய ராசிக்காரர்கள் யார் யார்?


தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வாரப் (பிப்ரவரி 23 - மார்ச் 1) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார் படித்து பயன் பெறுங்கள். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

மகிழ்ச்சிகரமான வாரம். உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செய்தொழிலில் நிலவி வந்த குழப்பங்களும் சிக்கல்களும் விலகும். நண்பர்களும் உங்களுக்குக் கீழ் வேலை 

செய்பவர்களும் உதவிகரமாக இருப்பார்கள். குடும்பத்தில் அமைதி சூழும்.  
உத்தியோகஸ்தர்களுக்குச் சிறிய  பிரச்னைகள் தோன்றி மறையும். ஆனாலும் மேலதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்களைத் தேடிச் செல்வீர்கள். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விளைபொருள்களை விற்பனை செய்வீர்கள். அதனால் திருப்கரமான 

லாபத்தை அள்ளுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தில் சாதகமற்ற சூழ்நிலை நிலவும். அதனால் அமைதியாகச் செயல்படவும். கலைத்துறையினர் திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தைப் றுவீர்கள். புதிய நட்புகளால் சந்தோஷம் அடைவார்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். நாளை படித்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதைத் தவிர்க்கவும். 

பரிகாரம்: "ஜெய ஜெய துர்க்கா' என்று ஜபித்துக்கொண்டே துர்க்கை சந்நிதியைச் சுற்றி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 24.

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் மன உறுதியுடன் செயல்படுவீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மனதில் எதையோ இழந்து விட்டது போன்ற எண்ணம் உண்டாகும். எவருக்கும் ஜாமீன் போடுவதோ பணம் பெற்றுத் தருவதோ கூடாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். இருப்பினும் விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு இல்லாததால் தற்போது இருக்கும் இடத்திலேயே திறம்படச் செயல்படுங்கள். வியாபாரிகள் நன்கு யோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யலாம். நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். 

புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் சுமுகமாக முடியும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். ஆகையால் திறமைகளைவளர்த்துக் கொள்ளவும். 

பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீர்கள். மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் ஈடுபடுவதைக் குறைத்துக் கொள்ளவும். 

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய) 

ஆனந்தமான வாரம். நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடி முடியும். நண்பர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறையும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிரிகளின் பலம் குறையும். 

உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரிகள் வரவேண்டிய பணம் விஷயமாக அக்கறை காட்டவும். விவசாயிகளுக்கு விவசாயப்பணிகள் அனைத்தும் நன்றாக முடியும். தானிய விற்பனையை லாபகரமாக செய்து முடிப்பீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியின் வாக்குவாதங்களை அதிகரிக்கும். போட்டிகளையும் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு பெயரும் புகழும் பெறுவதற்கான புதிய சாதனைகளைச் செய்வீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகளையும் பெறுவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தவும். விளையாட்டுகளில் ஈடுபடாமல் மனதை ஒருமுகப்படுத்தினால் எதிர்பார்த்த வெற்றியை அடையலாம். 

பரிகாரம்: முருகப் பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 25. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

ஆனந்தமான வாரம். உங்கள் மதிப்பு உயரும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதாரத்தில் சுபிட்சங்கள் ஏற்படும். இதனால் தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து பெருமைப்படுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். செயல்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளக்களைக் கவரும் திட்டங்களைத் தீட்டுவீர்கள்.விவசாயிகளுக்கு விளைச்சலும் வருமானமும் குறைவாகவே இருக்கும்.  புதிய குத்தகைகளை நன்கு பரிசீலித்து எடுக்கவும். 

அரசியல்வாதிகளின் செயல்கள் வெற்றிவாகை சூடும். கலைத்துறையினருக்கு கடின முயற்சிகளுக்குப்பிறகே வெற்றி கிடைக்கும். கலைத்துறையினர் பணவரவு சரளமாக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகள் அணிகலன்களை வாங்கி சந்தோஷப்படுவீர்கள். மாணவமணிகள் சீரிய முயற்சி செய்தால்தான் சராசரிக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெறமுடியும்.

பரிகாரம்: குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய) 

திருப்திகரமான வாரம். பெரியோர்களைச் சந்தித்து திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மனதில் குதூகலம் உண்டாகும். சுபச் செய்திகள் உங்களைத் தேடிவரும். 

வருமானம் எதிர்பார்த்ததற்கும் மேலாக இருக்கும். யாருக்கும் முன்ஜாமீன் தர வேண்டாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்யவும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வது நல்லது. 

விவசாயிகளுக்கு பயிர்களில் பூச்சிகளின் பாதிப்பால் விளைச்சல் குறையும். சில காரியங்களில் தடைகளுக்குப்பிறகே வெற்றி கிடைக்கும். 

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாகவே அமையும். கட்சியில் எவரிடமும் வெளிப்படையாகப் பழகவேண்டாம். கலைத்துறையினரைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். ஒப்பந்தங்களில் உங்கள் முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.பெண்மணிகள் திட்டமிட்ட வேலைகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் கல்வியில் முன்னேற்றம் அடைவீர்கள். விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள்.

பரிகாரம்: பைரவரை வழிபட்டு சிறப்படையுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 25, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

குதூகலமான வாரம். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்கள் உதவி செய்வார்கள். தொழிலில் புதிய இலக்கை எட்டுவீர்கள். ஆன்மிக சிந்தனைகளால் உங்கள் நம்பிக்கை பலப்படும். பெரியோர், ஆன்றோர்களின் ஆசியினால் உங்கள் புகழ் வளரும். 

உத்தியோகஸ்தர்கள் அதிகாரிகளை அனுசரித்துச்சென்று கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். நீர்ப்பாசன வசதிகளுக்கு செலவு செய்து எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள். 

அரசியல்வாதிகளிடம் கட்சி மேலிடம் கருணையுடன் நடந்து கொள்ளும். பதவி உயர்வும் பாராட்டும் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். புகழைத் தக்க வைத்துக்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு அதிகரிக்கும். மாணவமணிகளுக்கு படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். விளையாட்டிலும் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: செவ்வாயன்று "கந்தசஷ்டி கவசம்' படித்து முருகப்பெருமானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 23, 26. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

அதிர்ஷ்டகரமான வாரம். கவலைகளை மறந்து செயலாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவு ஏற்படாது. தொலைதூரத்திலிருந்து வரும் நற்செய்திகள் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். எவ்வளவு பெரிய இடையூறுகள் ஏற்பட்டாலும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும் உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவீர்கள். வியாபாரிகள் புதிய யுக்திகளைக் கையாண்டு வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உங்களின் பேச்சுத்திறனால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். விவசாயிகள் கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டுவீர்கள். தானிய விற்பனையில் லாபம் பெறுவீர்கள். 

அரசியல்வாதிகள் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். தொண்டர்களை அனுசரித்துச் சென்று காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள்செய்வதில் தாமதம் ஏற்படும். ரசிகர்கள் சற்று அலட்சியமாக இருப்பார்கள். பெண்மணிகளுக்கு கணவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். 

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் அங்காரகரை தீபமேற்றி வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 25, 27. 

சந்திராஷ்டமம்: 23,24.

{pagination-pagination}
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

சந்தோஷமான வாரம். குடும்பத்தில் நிம்மதி பூத்துக்குலுங்கும். புதிய நட்பு உருவாகும். உங்களின் தன்னம்பிக்கை வளரும். மனச்சோர்வடையாமல் உழைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் பலப்படும். முடிவு எடுக்கப்படாமல் இருந்த விஷயங்களில் தெளிவு பிறக்கும். உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பீர்கள். பண வரவுக்குத் தடைகள் ஏற்படாது. வியாபாரிகளுக்கு இது லாபகரமான வாரம்.  

புதிய கிளைகளைத் திறப்பீர்கள். லாபமும் பலமடங்கு உயரும். விவசாயிகள் கொள்முதலில் நல்ல லாபத்தைக் காண்பார்கள். உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவதற்கு நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். 

அரசியல்வாதிகள் வாக்கு வாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் பொறுப்புகளை கவனத்துடன் செயல்படுத்தவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். ரசிகர்களின் ஆதரவுக்குக் குறைவு ஏற்படாது. 

பெண்மணிகள் சுப நிகழ்ச்சிகளால் மன நிம்மதி அடைவார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறை காட்டவும். வெளிவிளையாட்டுகளின்போது கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 27, 28. 

சந்திராஷ்டமம்: 25,26.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சிறப்பான வாரம். பொருளாதாரத்தில் இருந்து வந்த சிரமங்கள் குறையும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் அன்பும் பாசமும் நிறையும். உற்றார் உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள். எதிலும் அளவோடு இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் சுமுகமாகவே முடியும். புதிய திட்டங்களால் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் கொட்டும். கடுமையாக முயற்சித்து மேலும் முன்னேற நினைப்பீர்கள்.

அரசியல்வாதிகள் வாயைக் கொடுத்து விவகாரங்களில் மாட்டிக்கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க தாமதம் ஏற்படும்.அதிக முயற்சிகளுக்குப்பிறகே வெற்றிகள் வந்து சேரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.  

பரிகாரம்: திங்கள் கிழமையில் சிவதரிசனம் செய்து நலன் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 24, 1. 

சந்திராஷ்டமம்: 27,28. 

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் உங்கள் மன உறுதியில் அவற்றைத் தவிர்ப்பீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருந்தாலும் விரயங்களும் அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு ஜாமீன் தரவேண்டாம்.  பயணங்களால் நன்மை உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். வியாபாரிகள் புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும். நண்பர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். விவசாயிகள் நல்ல மகசூலைக் காண்பீர்கள். சிறிது தாமதம் ஏற்பட்டாலும் வார இறுதியில் அனைத்தும் சுமுகமாக முடியும். 

அரசியல்வாதிகள் வெற்றிகளைக் குறைவாகவும் தோல்விகளை அதிகமாகவும் சந்திக்க நேரிடும். ஆகவே பொறுமையாகச் செயல்படவும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில் சிரமங்கள் உண்டாகும். ரசிகர்களின் ஆதரவிற்கும் குறைவு இருக்காது. 

பெண்மணிகள் சுப நிகழ்ச்சிகளால் மனநிம்மதி அடைவீர்கள். மாணவமணிகளுக்கு படிப்பில் அனுகூலமான நிலைமை தென்படும். மதிப்பெண்கள் அதிகரிக்கும். 

பரிகாரம்: அம்மனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 24, 28. 

சந்திராஷ்டமம்: 1.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பப் பொருளாதாரம் மேன்மை அடையும். உங்களின் செயல்கள் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். தேவைக்கேற்ப உறவினர்கள் உதவுவார்கள்.  

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். இதனால் அலுவலக வேலைக்கும் சந்தோஷத்துடன் ஈடுபடுவார்கள். வியாபாரிகளுக்கு கொள்முதல் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவுடன் புதிய முதலீடுகளில் நீங்கள் தைரியமாக ஈடுபடலாம். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும்.  

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் சோதனைகளைச் செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கலையில் ஆர்வம் வளரும். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களும் பெற்றோர்களும் உங்களை ஊக்கப்படுத்துவார்கள்.

பரிகாரம்: "நாராயணா' என்று ஜெபித்து கொண்டே பெருமாள் சந்நிதியை சுற்றி வரவும்.  

அனுகூலமான தினங்கள்: 27, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

{pagination-pagination}
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வரும் குழப்பங்களும் சிக்கல்களும் விலகி ஒற்றுமை ஏற்படும். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். பணவிரயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக நடந்து கொள்ளவும். பயணங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்கவும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு சீராகும். மேலதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். 
இருப்பினும் கடையை விரிவுபடுத்தி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தி மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிலருக்கு பால் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வந்து சேரும். தொண்டர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான வாரம். புதிய ஒப்பந்தங்களோடு அதிக வருமானமும் கிடைக்கும். பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 28, 1. 

சந்திராஷ்டமம்: இல்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com