திருமலையில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவம் இன்று தொடக்கம்

திருமலையில் 5 நாள்கள் நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) தொடங்குகிறது.
திருமலையில் வருடாந்திர 5 நாள் தெப்போற்சவம் இன்று தொடக்கம்

திருமலையில் 5 நாள்கள் நடைபெறும் வருடாந்திர தெப்போற்சவம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 25) தொடங்குகிறது.
 மாசி பௌர்ணமியை முன்னிட்டு திருமலையில் பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மார்ச் 1-ஆம் தேதி (பௌர்ணமி) வரை தெப்போற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி திருமலையில் தெப்போற்சவம் நடைபெறவுள்ள திருக்குளம் வண்ண மலர்கள், மின் விளக்குகளால் அழகாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. தெப்போற்சவத்துக்காக ஸ்ரீவாரி திருக்குளத்தில் இரண்டு
 அடுக்கு தெப்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 தெப்போற்சவ நாள்களில் மாலை 7 முதல் இரவு 8 மணிவரை உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம் வர உள்ளனர். தெப்போற்சவத்தின் முதல் நாள் சீதா ராம லட்சுமண சமேத ஆஞ்சநேயர் சுவாமி 3 சுற்றுகள், 2-ஆம் நாள் ருக்மணி சமேத கிருஷ்ணர் 3 சுற்றுகள், 3-ஆம் நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 3 சுற்றுகள், 4-ஆம் நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 5 சுற்றுகள், 5-ஆம் நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி 7 சுற்றுகள் வலம் வர உள்ளனர்.
 ஆர்ஜித சேவைகள் ரத்து: தெப்போற்சவத்தை முன்னிட்டு 5 நாள்களும் திருமலையில் பல்வேறு ஆர்ஜித சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பிப்ரவரி 25, 26-ஆம் தேதிகளில் வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை, பிப்ரவரி 27, 28, மார்ச் 1 ஆகிய தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்தோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 கருட சேவை ரத்து: மாதந்தோறும் பௌர்ணமி நாளன்று மாலையில் தேவஸ்தானம் கருடசேவையை நடத்தி வருகிறது. அதன்படி மார்ச் 1-ஆம் தேதி மாலை திருமலையில் பௌர்ணமி கருட சேவை நடக்கவிருந்தது. தெப்போற்சவத்தை முன்னிட்டு அன்றைய தினம் கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com