உங்களின் ஜோதிட கேள்விக்கு இங்கே பதில்: தினமணியின் ஸ்பெஷல் கட்டணச் சேவை

காலமாற்றம், கணினி யுகம் என்பது ஏதோ ஒரு துறைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நடைமுறை வாழ்க்கையில் பல நிலைகளில் அது எதிரொலிக்கிறது. 
உங்களின் ஜோதிட கேள்விக்கு இங்கே பதில்: தினமணியின் ஸ்பெஷல் கட்டணச் சேவை

காலமாற்றம், கணினி யுகம் என்பது ஏதோ ஒரு துறைக்கு மட்டும் சொந்தமானது அல்ல. நடைமுறை வாழ்க்கையில் பல நிலைகளில் அது எதிரொலிக்கிறது. 

மஞ்சப்பையும் கையுமாய் வேர்த்து விறுவிறுக்க கடைகடையாய் ஏறி இறங்கி பொருட்கள் வாங்கியது ஒரு காலம். இப்போது, வீட்டில் இருந்து நெட்டில் தட்டினால் வீட்டு வாசலுக்கு வந்து கதவை தட்டுகிறார்கள். 

இந்த மாற்றம் ஜோதிட துறையிலும் எதிரொலித்தால் எப்படி இருக்கும்?

இந்த யோசனை தினமணி குழுமத்திற்கு வந்ததின் விளைவே, ஆன்லைன் ஜோதிடம். ஏதோ கடமைக்கு செய்கிறோம் என்றில்லாமல் பிரபலமான ஜோதிடர்களைத் தொடர்புகொண்டு, அவர்களிடம் ஜோதிட ஆலோசனை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறது தினமணி. 

பலதரப்பட்ட மனிதர்களுக்கு பலதரப்பட்ட சோதனைகள். வேதனைகள். இதற்கெல்லாம் காரணம் கிரகங்கள். கிரகங்களின் தாக்கத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப நம் வாழ்க்கைப் பாதையை அமைத்துக் கொண்டால், ஓரளவு பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். அதுதான் ஜோதிட சாஸ்திரம்.

தொழில் என்றில்லை, குடும்பச் சூழல், வீடு வாகன யோகம், கல்வியோகம், கடல் கடந்த பயணங்கள், மண வாழ்க்கை அமைப்பு என்று அனைத்தையும் சிறப்புடன் அமைத்துக் கொள்ளலாம் என்பதுதான் உண்மை. இப்போது தினமணியின் ஸ்பெஷல் கட்டண சேவையில் மூன்று பிரபல ஜோதிடர்கள் பலன் சொல்லக் காத்திருக்கிறார்கள். நீங்கள் தெளிவான பதிலைப் பெற விரும்பினால் அவர்களையும் நீங்கள் அணுகலாம்.

இச்சேவையைப் பெற முதலில் தினமணி இணையத்திற்கு செல்லுங்கள். அதில், சிறப்பு ஜோதிடப்பக்கம் என்பதை கிளிக் செய்து ஸ்பெஷல் - கட்டணச் சேவையை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். 

ஸ்பெஷல் - கட்டணச் சேவை http://astrology.dinamani.com/

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com