நாராயண வனத்தில் இன்று அகத்தீஸ்வரர் கிரிவலம்

திருப்பதி அருகே உள்ள நாராயண வனத்தில் உள்ள மலையை தேவஸ்தானத்திற்கு சொந்தமான சிவன் கோயிலின் உற்சவமூர்த்திகள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர உள்ளனர். 
நாராயண வனத்தில் இன்று அகத்தீஸ்வரர் கிரிவலம்

திருப்பதி அருகே உள்ள நாராயண வனத்தில் உள்ள மலையை தேவஸ்தானத்திற்கு சொந்தமான சிவன் கோயிலின் உற்சவமூர்த்திகள் செவ்வாய்க்கிழமை கிரிவலம் வர உள்ளனர். 
திருப்பதியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள நாராயண வனத்தில் திருமலை தேவஸ்தானத்திற்கு சொந்தமான அகத்தீஸ்வரர் மற்றும் பாராசரேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களில் உள்ள உற்சவமூர்த்திகள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று அருகில் உள்ள நாராயண வன மலையை வலம் வருவது வழக்கம். 
அதன்படி ஜனவரி 16-ஆம் தேதி மாட்டுப் பொங்கலையொட்டி இங்கு கிரிவலம் நடக்க உள்ளது. நாராயண வனத்தில் காலையில் தொடங்கும் இந்த கிரிவலம் இரவு நகரியில் நிறைவடைகிறது. 
அங்கு உற்சவமூர்த்திகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்ற பின்னர் மீண்டும் கோயிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். 
இந்த கிரிவலத்தில் அருகில் உள்ள கிராம மக்கள் திரளாகக் கலந்து கொள்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com