பழனி மலைக் கோயிலுக்குச் செல்வோருக்கு மட்டும்!

பழனி மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப் கார் ஆண்டு பராமரிப்பு பணிக்காக அடுத்த 40 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
பழனி மலைக் கோயிலுக்குச் செல்வோருக்கு மட்டும்!

பழனி மலைக்கோயிலுக்குச் செல்லும் ரோப் கார் ஆண்டு பராமரிப்பு பணிக்காக அடுத்த 40 நாட்களுக்கு நிறுத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யப் படி வழி, யானைப் பாதை, வின்ச் பாதை ஆகியவற்றுக்கு மாற்றாக ரோப் கார் இயக்கப்பட்டு வருகிறது. மலைக் கோயிலுக்கு இரண்டு நிமிடங்களில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 

ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் அந்த மாதம் முழுவதும் ரோப்காரை நிறுத்தி, ஆண்டு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஜூலை இரண்டாம் வாரத்திலிருந்து 40 நாட்கள் நிறுத்த உள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com