இந்த வாரம் சாதனைப் படைக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?

12 ராசிகளுக்குமான இந்த வார (ஜூலை 6 - ஜூலை 12) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 
இந்த வாரம் சாதனைப் படைக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்?


12 ராசிகளுக்குமான இந்த வார (ஜூலை 6 - ஜூலை 12) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றிவாகை சூடுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். எதிரிகளின் பலம் குறையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரிகள் விற்பனைப் பிரதிநிதிகளை நியமித்து வியாபாரத்தைப் பெருக்குவர். புதிய முதலீடுகளை தள்ளி வைக்கவும். விவசாயிகளுக்கு கொள் முதலில் லாபம் பெருகும். குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். 

அரசியல்வாதிகள் மேலிடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். சில குறுக்கீடுகள் ஏற்படும். மனம் தளராமல் முயற்சித்தால் பலன் அடையலாம். கலைத்துறையினர் பெயரும் புகழும் பெறுவார்கள். புதிய சாதனைகளைச்  செய்வீர்கள். பெண்மணிகளின் குடும்பத்தில் அமைதியையும் ஒற்றுமையையும் காண்பார்கள். உறவினர்கள் கைகொடுப்பார்கள். 

மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுவர். ஆசிரியர்களின் ஆதரவு பெருகும். 

பரிகாரம்: சிவபெருமானையும் துர்க்கையையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 6, 7. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

வேலைகள் அனைத்தையும் தெளிவுடன் செய்வீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உடன்பிறந்தோர் வழியில் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் வாக்குவாதம் செய்வோரிடமிருந்து தள்ளி இருக்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்காது. உங்களுக்கு உதவியாக இருந்த மேலதிகாரிகள் இடம் மாறி செல்வதால் பாதுகாப்பு இருக்காது. பண வரவு சீராக இருக்கும். வியாபாரிகள் கடுமையாக உழைப்பார்கள். காலதாமதமானாலும் இறுதியாக வெற்றி தேடி வரும். விவசாயிகள் அதிக மகசூலைப் பெறுவார்கள். கால்நடை பராமரிப்புச் செலவுகள் கூடும் என்பதால் கவனம் தேவை.  

அரசியல்வாதிகள்பொறுப்புகளை உணர்ந்து செயல்படவும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யவும். பெண்மணிகள் குடும்பத்தில் அமைதி காண்பார்கள். ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வார்கள்.  மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்தி பலமுறை படித்து  மனப்பாடம் செய்யவும்.  

பரிகாரம்: விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கி சுகம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}


மிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியடையும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். இருப்பினும் கடுமையான தடைகளைத் தாண்டி வர வேண்டியிருக்கும். உறவினர்களின் உதவியை அதிக அளவு எதிர்பார்க்க முடியாது. உங்கள் மதிப்பு மரியாதைகள் குறையாது. 

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அலுவலக வேலைகளைச் செய்வார்கள். சக ஊழியர்கள் சற்று பாராமுகமாக நடந்து கொண்டாலும் அதைப் பொருட்படுத்த வேண்டாம். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். விவசாயிகள் அதிகம் உழைக்க வேண்டி வரும். உடல்நலத்தில் கவனம் தேவை. 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மக்களுக்கான போராட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ளவும்.  கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்களை முடித்துக்கொடுப்பதில் சில தடைகள் ஏற்படும். உங்கள் முழுத் திறமையை பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். மாணவமணிகள் தீவிரமாகப் படிக்கவும். விளையாடும் நேரத்தில் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: பெருமாளை வழிபட்டு சுபிட்சங்கள் பெறவும்.

அனுகூலமான தினங்கள்:  7, 8. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

அதிகமான வேலைத் தொந்தரவுகளால் அலைச்சல்களுக்கு ஆளாவீர்கள். இறுதியில் இத்தகைய நிலைமைகளில் மாற்றம் தென்படும். ஸ்பெகுலேஷன் துறைகளில் ஈடுபட்டு லாபமடைவீர்கள். பயணங்களாலும் லாபமுண்டு. பொருளாதாரத்தில் சீரிய முன்னேற்றம் உண்டாகும்.  

உத்தியோகஸ்தர்கள் எதிர்வரும் இடையூறுகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட வேலைகள் யாவும் சாதகமாக முடியும்.  வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் நன்றாகவே இருக்கும். புதிய செலவுகள் செய்து கடைகளைச் சீரமைப்பீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாகவே இருக்கும். தொழிலுக்காக புதிய செலவுகள் செய்வீர்கள்.  

அரசியல்வாதிகளின் முயற்சிகள் வெற்றி பெறும். போட்டிகளையும் சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெற்று மகிழ்ச்சியுடன் செயலாற்றுவர்.  

பெண்மணிகளுக்கு கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்கி மகிழ்வர். மாணவமணிகள் கல்வியில் ஆர்வம் செலுத்தி மதிப்பெண்களை அள்ளுவார்கள். பெற்றோரின் ஆதரவைப் பெற்று மகிழ்வர்.

பரிகாரம்: துர்க்கையை வழிபட்டு நலம் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 6, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}
சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

பயணங்களால் நன்மையடைவீர்கள். மதிப்பு மரியாதை உயரும். உறவினர்களிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.  

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் பிரச்னைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரிகள் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். கூட்டாளிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாற்றுப்பயிர்களை பயிர் செய்வதன் மூலம் மேலும் லாபம் அடையலாம்.

அரசியல்வாதிகள் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். கட்சியில் மதிப்பும் மரியாதையும் பெருகும். பல வழிகளில் வருவாய் கிடைக்கும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். பொருளாதார வசதிகளில் முன்னேறுவதற்கான அறிகுறிகள் தென்படும்.

பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். பணவரவு அதிகரிப்பதால் சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நன்கு கவனம் செலுத்தவும். பெற்றோரின் ஆதரவுடன் விளையாட்டுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவார்கள்.

பரிகாரம்: பைரவரை வணங்கி நலம் பெறுங்கள். 

அனுகூலமான தினங்கள்: 7, 9. 

சந்திராஷ்டமம்: 6.

{pagination-pagination}
கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதாரத்தில் குறை இருக்காது. விரயங்களுக்கு வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கை தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தினரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்களின் அலட்சியப் போக்கைப் பெரிதுப்படுத்தாதீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை மிகுந்த கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளிடம் சில சலுகைகள் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக முடியும். கூட்டாளிகளை சற்று விலக்கியே வைக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும், உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் அரசிடமிருந்து சில நன்மைகளை அடைவார்கள்.கட்சி மேலிடத்திடம் சுமுகமான உறைவை வளர்த்துக் கொள்ளவும். கலைத்துறையினருக்கு பண
வரவு நன்றாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். 

பெண்மணிகள் உற்றார் உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். பேசும் நேரத்தில் கவனம் தேவை. மாணவமணிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். கேளிக்கை, விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.

பரிகாரம்: திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பரை வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 6, 10. 

சந்திராஷ்டமம்: 7, 8, 9.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வருங்காலச் சேமிப்புகளுக்கு அடிகோலுவீர்கள். பொருளாதாரத்தில் எந்தக் குறைவும் ஏற்படாது. சட்டத்துறையை சேர்ந்தவர்கள் எதிலும் கவனமாக இருக்கவும். உற்றார் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தாருடன் சற்று விட்டுக்கொடுத்துச் செல்லவும். 

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைக் கவனத்துடன் செய்து முடிப்பர். சக ஊழியர்களை நம்ப வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமாராகவே இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகளுக்கு தானிய உற்பத்தியில்  நல்ல பலன் கிடைக்கும். ஊழியர்களின் தேவையை பூர்த்தி செய்யவும். 

அரசியல்வாதிகள் பெரும் சாதனைகள் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். ரகசியத் திட்டங்கள் வெற்றிப் பாதையில் உங்களை இட்டுச் செல்லும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்புந்தங்கள் செய்ய நிறைய முயற்சி தேவை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும். பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவர். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். 

பரிகாரம்: பிரசன்ன வேங்கடேசப் பெருமாளை வணங்கி நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்: 7, 12. 

சந்திராஷ்டமம்:  10,11.

{pagination-pagination}


விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

எடுத்த காரியங்கள் யாவும் வெற்றியுடன் முடியும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும்.  மனதிலிருந்த குழப்பங்கள் விலகி, தெளிவுகள் தென்படும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். நெருங்கியவர்களிடம்  எச்சரிக்கையுடன் பழகுங்கள்.   

உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பளு அதிகரித்தாலும் பணவரவுக்கு ஏதும் குறைவு வராது. வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வார்கள். உங்கள் முயற்சிகள் சராசரியான வெற்றிகளைத் தேடித்தரும். விவசாயிகள் சலிப்பில்லாமல் உழைத்தால் பலன்களைப் பெறலாம். புதிய குத்தகை முயற்சிகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியத்துவம் கிடைக்கும், பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் கூடும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்திலும் எச்சரிக்கை தேவை. மாணவமணிகள் விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வார்கள். 

பரிகாரம்: "நமோ நாராயணா' என்று தினமும் "108' முறை ஜெபித்து வரவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 11. 

சந்திராஷ்டமம்:  12.

{pagination-pagination}
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். முயற்சிகளில் சில தடங்கல்களைச் சந்திக்க நேரிடும். அலைச்சல்களும் அதிகரிக்கும். உறவினர்களுடன் சிறிய மனக்கசப்புகள் உருவாகும். பொருளாதார நிலையில் இழுப்பறிகள் தொடரும். உடல்நலத்தில் அக்கறை தேவை. 

உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவாக மேலதிகாரிகள் நடந்து கொள்ளமாட்டார்கள்.  அவர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சில சிரமங்கள் ஏற்படும். நண்பர்களிடம் மனக்கசப்பும் உண்டாகலாம். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவால் பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்த முனைவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு இருந்துவந்த தடைகள் நீங்கும். புதிய பதவிகளில் அமர்வீர்கள். கலைத்துறையினரின் திறமைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். ஒப்பந்தங்கள் அனைத்தும் லாபகரமாக முடியும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோரையும் ஆசிரியர்களையும் அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: ஆஞ்சநேயப் பெருமானை தரிசனம் செய்யுங்கள். 

அனுகூலமான தினங்கள்:  8, 11. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உங்கள் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். அனுகூலமான பயணங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் சுபிட்சங்கள் கூடும். இதனால் சில தெய்வ காரியங்களுக்கு செலவு செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பாராத ஆதரவைப் பெறுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக் கசப்பு நீங்கி நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களைத் தீட்டுவீர்கள். விவசாயிகள் கடுமையாக உழைத்து நல்ல மகசூலை காண்பர்.  

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். பல வழிகளில் வருவாய் கிடைக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பண
வரவு நன்றாக இருக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். 

பரிகாரம்: பெருமாள் கோயிலில் தாயார் சந்நிதியில் தீபமேற்றி வழிபடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 11. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}
கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

நினைத்த காரியங்கள் அனைத்தும் குதூகலமாக நிறைவேறும் காலகட்டமிது. பொருளாதாரத்தில் மேலும் முன்னேற்றங்களைக் காண்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். உறவினர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்வீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டிய நேரமிது. வியாபாரிகள் நன்றாக யோசித்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம். கூட்டாளிகளை நம்பி எதையும் செய்ய வேண்டாம். விவசாயிகளுக்கு கொள் முதலில் நல்ல லாபம் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாக உள்ளதால் விளைச்சல் நன்றாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் எல்லாம் வெற்றிகரமாக முடியும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும், கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். ஒப்பந்தங்களில் பிரச்னைகள் தோன்றினாலும் முயற்சி வெற்றி பெறும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சொல்லிக்கொள்ளும்படி இருக்காது.  சில கருத்து வேறுபாடுகள் தோன்றும். மாணவமணிகள் படிப்பில் முன்னேற்றம் அடைவர். 

பரிகாரம்: செந்திலாண்டவரைத் தரிசித்து நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்:  9, 10. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பொருள் வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். சுறுசுறுப்புடன் செயலாற்றி தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அநாவசியப் பயணங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். 

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை நன்றாக முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சாதகமாக இருக்கும். இருப்பினும் எவருக்கும் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகளுக்கு உழைப்புக்கேற்ற மகசூல் கிடைக்கும். பழைய கடன்கள் முடிவுக்கு வரும். கால்நடைகளின் பராமரிப்புச் செலவுகள் கூடும். 

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் மதிப்பும் மரியாதையும் உயரும். கலைத்துறையினரின் திறமைகளை மற்றவர்கள் பாராட்டுவார்கள். ஒப்பந்தங்கள் யாவும் லாபகரமாக முடியும். பெண்மணிகள் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். மாணவமணிகள் விளையாட்டில் கவனத்துடன் ஈடுபடவும். பெற்றோரை அனுசரித்துச் செல்லவும்.

பரிகாரம்: காகத்திற்கு அன்னமிட்டும் அனுமனை வணங்கியும் நலம் பெறவும். 

அனுகூலமான தினங்கள்:  11, 12.

சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com