பழனி மலைக் கோயிலுக்கு கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்களுக்கு ஒரு அலர்ட்!

பழனி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல பயன்பாட்டிலுள்ள ரோப் கார், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூலை 12 முதல் 40 நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது.
பழனி மலைக் கோயிலுக்கு கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்களுக்கு ஒரு அலர்ட்!

பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்தத் தகவலை தெரிந்துகொள்வது அவசியமாகும்.

அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தற்போது பயன்பாட்டிலுள்ள ரோப் கார், வருடாந்திர பராமரிப்பு பணிக்காக ஜூலை 12 முதல் 40 நாள்களுக்கு நிறுத்தப்படுகிறது.

இது குறித்து பழனி திருக்கோயில் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: 

பழனி மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்கள் ரோப் கார் மூலம் 2 நிமிடத்தில் மலையை அடைகின்றனர். இந்த ரோப் கார், நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரமும், மாதம் ஒன்றுக்கு ஒரு நாளும் சேவை நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக வியாழக்கிழமை முதல் 40 நாள்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது. இந்த 40 நாள்களும் மலைக் கோயில் மேல்தளம் மற்றும் கீழ்தளத்திலுள்ள ரோப் கார் நிலையத்தில் மராமத்து, ஜெனரேட்டர், பெட்டிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. 

மேலும், இயந்திர பேரிங்குகள், சக்கரங்கள், டவர்களில் உள்ள சக்கரங்களிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. வழக்கம்போல், விஞ்ச் 3 வழிகளிலும் இயங்கும். எனவே, முதியோர்கள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் விஞ்ச் மற்றும் யானைப் பாதையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com