திருப்பதியில் கும்பாபிஷேகம்: சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடை விதிப்பது இதுவே முதல்முறை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 9 முதல் 17 வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
திருப்பதியில் கும்பாபிஷேகம்: சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடை விதிப்பது இதுவே முதல்முறை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 9-ம் தேதி மாலை 6 மணி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி காலை 6 மணி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருமலையில் ஆகஸ்ட் 12 முதல் 16-ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் மக்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சாமி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கூறியுள்ளார். திருப்பதியில் கும்பாபிஷேகத்தின்போது முதல் முறையாகப் பக்தர்களுக்கு சாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

திருப்பதி ஏழுமலையானுக்கு 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அந்தச்சமயத்தில் பக்தர்களின் கூட்டம் கட்டுப்படுத்தும் அளவிற்கு இருந்தது. ஆனால், தற்போது சாதாரண நாட்களிலேயே லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் திருமலையில் குவிந்து வருகின்றனர். அதனால், கும்பாபிஷேகத்தின்போது வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

இந்நிலையில், ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வேத பண்டிதர்கள், வேத பாடசாலை மாணவர்கள், ரிக்வேதத்தவர்கள் என தொடந்து 5 நாட்கள் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற உள்ளது. இதனால், ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை ஏழுமலையானைத் தரிசிக்க பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம், மலைப்பாதை வழியாகச் செல்லும் பக்தர்கள் நடந்து செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 17-ம் தேதி காலை 6 மணிக்கு பிறகு மீண்டும் வழக்கம் போல் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com