சென்னை காளிகாம்பாள் கோயிலில் தொடங்கியது ஊஞ்சல் உற்வச பெருவிழா

சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில்...
சென்னை காளிகாம்பாள் கோயிலில் தொடங்கியது ஊஞ்சல் உற்வச பெருவிழா


சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ஆடி மாதத்து ஊஞ்சல் உற்வச பெருவிழா இன்று முதல் விமரிசையாகத் தொடங்கியுள்ளது. 

அன்னை ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ காளிகாம்பாள் எனும் திருநாமம் கொண்டு சர்வ மங்களகாரிணியாகவும், சர்வ துக்கவிமோசினியாகவும், சர்வ விக்னநிவாரிணியாகவும், சர்வவியாதி விநாசினியாகவும், சர்வ சௌபாக்யதாயினியாகவும் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்ஜினியாய் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜா அவர்கள் வருகை தந்து வழிபாடு செய்ததும், மாகாளி அருள்பெற்ற மகாகவி சுப்ரமணிய பாரதியார் தன் பாமாலையை சூட்டி வழிபட்டதும் இத்திருத்தலமே.

பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் இன்று முதல் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் ஊஞ்சல் உற்சவம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து பத்து ஞாயிற்றுக்கிழமைகளில் (22.07.2018 முதல் 23.09.2018 வரை) காலை 11.00 மணியளவில் பால், இளநீர், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம், புஷ்பங்கள் என ஒவ்வொரு வாரமும் 108 குடம் கொண்டு மூலவர் ஸ்ரீ காளிகாம்பாளுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com