அம்மன் கோயில்களில் ஆடித் திருவிழா

திருவள்ளூரில், பவானி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் திரளானோர் கலந்து
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் ஆடிவெள்ளியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பவானி அம்மன், அங்காள பரமேஸ்வரி  அம்மன்.
திருவள்ளூர் ராஜாஜிபுரத்தில் ஆடிவெள்ளியையொட்டி, சிறப்பு அலங்காரத்தில் பவானி அம்மன், அங்காள பரமேஸ்வரி  அம்மன்.

திருவள்ளூரில், பவானி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற குத்துவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருவள்ளூரில் ராஜாஜிபுரம் பகுதியில் பவானி அம்மன், அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், 12-ஆம் ஆண்டு ஆடித்திருவிழா ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22-ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இதில், ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதில், 3-ஆவது நாள் திருவிழாவான ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காலையில் கரகம் புறப்பாடு, நகர் வலம் வருதல், அதையடுத்து புஷ்ப அலங்காரத்துடன் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றன. முன்னதாக, அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், பெண் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். பின்னர், கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 
வேலூர் மாவட்டத்தில்....
குடியாத்தம் தாழையாத்தம் பஜார், ஆற்றங்கரையில் உள்ள பச்சையம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயில் திருவிழா கடந்த 6-ஆம் தேதி காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கி நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அம்மன் வீதிஉலா நடைபெற்றது. 
இதையொட்டி, காலை 9 மணிக்கு செருவங்கி சாமுண்டியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, பச்சைக் கரகம், மேல்பட்டி சாலை, சந்தப்பேட்டை பஜார், தாழையாத்தம் பஜார் வீதியாக கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. மதியம் கூழ் வார்த்தலும், அன்னதானமும், மாலையில் அம்மன் வீதி உலாவும் நடைபெற்றன. 
விழாவுக்கான ஏற்பாடுகளை முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம். பாஸ்கர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என். ஹரி, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் என். ஜெயப்பிரகாஷ், வி. சீனிவாசன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
வடசேரி துர்கையம்மன் கோயிலில்..
ஆம்பூர் அருகே வடசேரி துர்கையம்மன் மற்றும் பெரிய நாச்சியம்மன் கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை விழா நடைபெற்றது.
விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com