உலோகத்தில் கிரகங்களின் ஆதிக்கம்!

உலகில் வாழும் அணைத்து ஜீவராசிக்கும் நீர், உணவு, காற்று முக்கியமானவை. அதை சீராக கொடுத்துக்கொண்டு இருக்கும் கடவுளுக்கு
உலோகத்தில் கிரகங்களின் ஆதிக்கம்!


உலகில் வாழும் அணைத்து ஜீவராசிக்கும் நீர், உணவு, காற்று முக்கியமானவை. அதைச் சீராக கொடுத்துக்கொண்டு இருக்கும் கடவுளுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். 

அண்டத்திலுள்ளதே பிண்டம் 
பிண்டத்திலுள்ளதே அண்டம் 
அண்டமும் பிண்டமு மொன்றே 

அறிந்து தான் பார்க்கும் போதே   -   என்று சித்தர் கூற்று.

பொதுவாக உடலை பிண்டம் என்போம். பூமி உள்பட பிரபஞ்சத்தை அண்டம் என்போம்.    உலகத்தில் உள்ள அனைத்தும் பிண்டத்தில் உள்ளது என்பது ஒரு சூட்சம விதி என்னவென்றால் - பிண்டம்  என்பது உடம்பைக் குறிக்கும்.பிரபஞ்ச சக்தியானது பஞ்ச பூதங்களுள் அமைந்துள்ள மனித உடலானது உலகில் உள்ள தாவரப் பொருட்கள் மற்றும் பஞ்சலோகத்தால் அடங்கி உள்ளது.  இந்தத் தத்துவங்களின் அடிப்படையில்தான் மனித உயிர் அனைத்து சக்திகளையும் ஆட்டுவிக்கிறது.  உலோகங்கள் நமது உடலை அண்டத்துடன் இணைக்கும் மாய வேலையைச் செய்கின்றன என்பதை சித்தர்கள் கூற்று. அதனால் தான் நம் முன்னோர்கள் தங்கள் உடலில் எப்பொழுதும் உலோகதன்மை உடலில் இருக்கும் வண்ணம் ஐம்பொன்னை அணிந்து வந்தனர். 

இந்த உலோகங்களை அணிவதால் உலோகத்தில் உள்ள தாது சத்துக்கள் நம் உடலுக்கு ஈர்ப்பு தன்மை கொண்டு இயக்கும் என்பது அறிவியல்ரீதியான உண்மை.  இந்த ஐம்பொன் ஆபரனகளுக்கு அதிக காந்த ஈர்ப்பு சக்தி, ஞானசக்தி, அறிவு ஆற்றல், ஆன்மிக சக்தி, புத்துணர்ச்சி, உடல்ரீதியான ஊக்குவிப்பானாக உள்ளது இவ்வுலகங்கள்.  

அதுவே நம் காலங்களில் பேஷன் என்ற பெயரில் பிளாஸ்டிக் மற்றும் கவரிங் அணிவது என்கின்றனர். நம் முன்னோர்கள் சமைப்பதற்கு மண்பாண்டங்கள், வெங்கலம், வெள்ளீயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களை தான் அதிகமாகப் பயன்படுத்தி வந்தனர். அதையே சீராக பெண் வீட்டாரிடம் தரப்பட்டது. பெண்ணிற்கு சீதனமாக செம்பு குடம், செம்பு தவளை, செம்பு பாத்திரங்கள் மற்றும், தங்க வெள்ளி நகைகள், வெள்ளி பாத்திரம், ஈய சொம்பு என்று கொடுத்து வந்தனர். வேதியல் கோட்பாட்டுக்கு இணங்க இவற்றுள் உலோகத்தின் தன்மையும் உள்ளது. அதையே அறிவியலும் ஜோதிடமும் என்ன கூறுகிறது என்பதைச் சிறு தொகுப்பைப் பார்ப்போம்.   

கிரக சக்திகள்

  •  பழங்காலங்களில் மக்கள் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் அணிந்து கொண்டு கோயிலுக்குச் சென்று தனது பிரார்த்தனைகளை கடவுளிடம் சமர்ப்பித்தனர். இது ஒருவகையான நேர்மறை (Positive) அதிர்வு சக்தி ஆகும். பஞ்சலோகங்கள் எனப்படும் பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் கொண்டு கடவுளின் சிலை அமைக்கப்படுகின்றனர். இதுவே கோயில் கலச கும்பாபிஷேகத்திற்கும் பயன்படுத்துகின்றன. முக்கியமாக நம் நாட்டில் சிலைகள் பிரபஞ்சத்தின் நுழைவு வாயிலாகக் கருதப்படுகிறது. நகைகளை ஆபரணமாகக் கடவுளுக்கு அணிவிக்கப்படுகிறது, இதனால் கடவுளைச் சுற்றி ஒரு ஒளியை மற்றும் உயர் சக்தியை நாம் பெறுகிறோம். உலோக சத்துகள் குறிப்பிட்ட அளவில் நம் உடலிலும் சேர வேண்டும் என்பதற்காக, நம் முன்னோர் ஐம்பொன் சிலை அபிஷேகம் செய்து அதனை பிரசாதம் வடிவில், மற்றும் சமையல்  பாத்திரம் வழியிலும் கொடுக்கின்றனர். உடல் முழுவதும் இயங்கிவரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் இருக்கும் சக்தியை அதிகரிக்க செய்யும் தன்மை உலோகங்களுக்கு உண்டு. உலோகங்கள் இயந்திர உற்பத்திக்கு  மட்டும் அல்லாமல் உணவுடன் உட்கொள்ள உதவியாக இருக்கும். நம் உடலிலும் மற்ற  ஜீவராசிக்கும் இன்றியமையாத ஒரு கனிம சேர்க்கை பெற்றுள்ளது. நம் உடலில் இதன் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உடல் சீராக செயல்படும். உடல் முழுவதும் இயங்கிவரும் பிராண சக்தியை பலப்படுத்தி, உடலில் இருக்கும் உலோக சக்தியை அதிகரிக்க செய்யும்.
  • மனித உடலுக்கு தேவையான உலோக சத்துகள் பல விதங்களாக உள்ளன. மண்ணில் உள்ள இயற்கையான உலோக சத்துகள் நாம் பருகும் நீர் மற்றும் உண்ணும் உணவு பொருட்கள் மூலம் உடலுக்குள் சிறிதளவுதான் சேர்கிறது. உடலில் உள்ள உலோக மாறுபாட்டால் பலவித நோய்கள் ஏற்படுகின்றன அவை இரத்தச் சோகை, மயக்கம்,  மூளை வளர்ச்சிக் குறைபாடு, தொற்றுநோய்கள், எலும்பு இயக்கக் குறைபாடுகள், குளுக்கோஸ் மாற்றங்கள், கொழுப்பு வளர்சிதை மாற்றம், வில்சன் நோய், தோல் வியாதி, வைட்டமின் குறைபாடு எனப் பல நோய்கள் வருவதாக அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. உலோகங்களை அறிவியலுக்கும் ஈடாக நம் வேத ஜோதிடம் தொடர்பு படுத்துகின்றனர். சூரியன் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற செம்பு / தாமிரமாகவும், சுக்ரன் வெள்ளியாகவும், குரு தங்கமாகவும், புதனை பித்தளையாகவும், இரும்பை சனியாகவும், சந்திரன் ஈயமாகவும் பிரித்து கூறப்படுகிறது நம் ஜோதிடம்.

  • ஒரு மனிதனின் ஜாதகத்தில் பலவீன கிரகம் அதற்கேற்ப உலோக குறை / நிறை ஏற்படும். எடுத்துக்காட்டாக சூரியனும் வலுத்து இருந்தால் அவர்களுக்கு தாமிரம் (CU) குறைபாடு (deficiency) ஏற்படாது. ஜாதகத்தில் சூரியனும், செவ்வாய் கிரகங்கள் பலமாக இருத்தல் கோபம் அதிமாக வரும், ரத்த அழுத்தம் தைராய்டு, தோலில் உள்ள மெலனின் மாறுபாடு, ரத்த அழுத்தம் மற்றும் கண் குறைபாடு ஏற்படும். இதற்கு தீர்வாக நீர் நிறை உள்ள பகுதிகளில், கோயில் குளங்களில் குளித்தால், இளநீர் அருந்துதல், குளிர்ச்சியான பொருள் சாப்பிடுதல், கண்ணில் நல்ல நீரை (சந்திரனை) கொண்டு அலம்புதல் போன்றவை செய்யவேண்டும். 
  •  ஜாதகத்தில் சூரியன் மற்றும் செவ்வாயை பலம் அல்லது  பலவீனத்திற்கு ஏற்ப நோய்கள் வர வாய்ப்பு உண்டு. இது இன்னும் ஆழமாக ஆராயவேண்டும். தாமிர என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக தாமிரம் என்பது ஒன்றோடு ஒன்று செயல்படுத்தும் ஒரு ஊக்குவிக்கி (connector). தாமிரம் என்பது முக்கியமான ராஜ உறுப்புகளைச் செயல்பாட்டை செயல்படுத்தும் ஒரு முக்கிய உலோகம் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது. அதேபோல்  நம் உடலை அதிவேகமாக ஊக்குவிப்பானாகவும் மற்றும் உயிரூட்டியாக செயல்படும் குணம் தாமிரத்திற்கு உண்டு. சூரியன் எவ்வாறு தலை கிரகம் என்று கூறுகிறோமோ அதுபோல் சூரியன் ஆதிக்கம் கொண்ட தாமிரம் தலை என்று கூறுகிறோம். இதன் செயல்பாடு முக்கிய ராஜா உறுப்புகளான இருதயம் (சந்திரன்), கொழுப்பை (குரு) கட்டுப்படுத்தும் கருவியாகவும், ரத்த செல்களை (செவ்வாய்) சீர்ப்படுத்தும் ஊக்குவிப்பானாகவும், நரம்பையும் (புதன்) சீராக்குபவனாகவும், கருப்பையைப் பலப்படுத்தும்  (சுக்கிரன்) சக்தியாகவும்,  இரும்புச்சத்து (சனி) அதிகப்படுத்தவும் மற்றும் சீராக்கும் செயலை செம்பு உடம்பில் செயல்படுகிறது. இந்த தாமிர செயல்பாட்டை பல உலக ஆராய்ச்சி மூலம் பல கண்டுபிடித்து உலக பிரதிகளில் வெளியிட்டு உள்ளன (International peer review journals). தாமிர குறைபாட்டில் உள்ளவர்கள் அதிகமாக செப்பு பத்திர நீரை, செம்பு வளையல் பயன்படுத்தவேண்டும், சூரியன் என்பது தூய்மை அதுபோல் தாமிரம் என்பதும் ஒரு தூய்மையான உலோகம் எப்படி? நீரில் செம்பு வலயம் போட்டு வைத்தால் நீரில் உள்ள கிருமிகளை அழித்துவிடும். இது அப்பட்டமான ஒரு உண்மை. தாமிரம் பற்றி அறிவியல் ஆராய்ச்சியில் ஊர்ஜிதப்படுத்தபட்டுள்ளது.
  • சூரியன் அல்லது செவ்வாய் தாக்கம் உள்ளவர் குறைவாக தாமிரத்தை உட்கொள்ளலாம். உடலின் எல்லா பாகங்களின் மின்சாரம் போன்று உடல் கூறுகளை உயிரூட்டும் ஊக்குவிக்கும் கருவியாகும். கிரகங்களை சூரியன் மற்றும் செவ்வாய் தலை என்று கூறுவது போல. தாமிரம் ஒரு உலோகங்களின் தலை என்று கூறுகிறோம். புதன் ஆதிக்கம் பெற்ற பித்தளை உலோகம் செப்பு, துத்தநாகம் கொண்ட ஒரு கலவை. கடுமையானதாக இருப்பதால் பித்தளையை பத்திரவடிவில் பயன்படுத்துகின்றனர். இந்த உலோகம் நம் உடலுக்குத் தேவையான ஒன்று.

  • தங்கம் என்பது உயர்வு கொண்ட குருவை குறிக்கும் உலோகம். இதனை நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். குரு முழு சுபர். தங்கத்தை தலையில் இருந்து வயிறு வரை  ஆபரணங்களாக காதணி, கழுத்தணி, மோதிரம், ஒட்டியாணம் என்று பல நகைகளை உடம்பில் படும்மாதிரி அணியவேண்டும். மோதிர விரலில் உள்ள முக்கியமான நரம்பு மண்டல புள்ளி, நமது நுண்ணிய உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் நம்முடைய மணிக்கட்டு பகுதியில் 5 முக்கியமான நரம்பு புள்ளிகள் உள்ளது. இது சக்தி ஓட்டத்தை விரல் நுனியில் இருந்து, உடலின் முக்கியமான உறுப்புகளுக்கு கடத்திச் செல்கிறது. ஐம்பொன்னால் ஆன மோதிரங்கள் அல்லது காப்புகள் அணிவதால் பிரபஞ்சத்தில் உள்ள சக்தியை எடுத்து ஒரு வேதியியல் மாற்றத்தை உண்டு பண்ணி இந்த முக்கிய நரம்பு புள்ளிகள் வழியாக அனுப்பி, நம்முடைய உடலின் உறுப்புகளை நல்ல விதமாக இயங்கச் செய்யும். பொன் அணிபவர்கள், தங்களது எண்ண அலைகளைப் பிரபஞ்சத்தில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்ப இயலும் என்று சொல்லப்படுகிறது.
  • உஷ்ணத்தை தணிக்கும் ஒரு உலோகம் வெள்ளி. வெள்ளியின் அலைவீச்சு தங்கத்தை விடக் குறைந்த அளவில் இருக்கிறது. ஆனால், வெள்ளியானது சுக்ர சம்பந்தம் கொண்டதாக இருப்பதால் உள்ளத்தில் பெருகும் உணர்வு அலைகளை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. வெள்ளியினை அதாவது குளுமையான சுக்ரன்  ஆதிக்கம் என்பதால் இதை இடுப்புக்கு கீழ்ப்பகுதியில் அணியும் நகைகளாகக் கொலுசு, மெட்டி, அரணை என்று உடம்பில் அக்குபஞ்சர் முறை கொண்டுவந்தனர். கால்வலி உள்ளவர்கள் கொலுசு அணிந்தால் வலி இல்லாமல் போகும். இது எனக்குத் தெரிந்தவர் விஷயங்களில் நடைபெற்ற உண்மையான ஒன்று. 
  • மனித உடலுக்குப் பாதிப்பை உண்டாக்கும் ஆபத்தான உலோகம் என்று எல்லோராலும் சொல்லப்படுகிறது ஈயம். ஆனால் இதிலும் சில நன்மைகள் நமக்கு உண்டு. இதுவும் ஐம்பொன் செய்ய பயன்படுகிறது, ஈயம் ஒரு சந்திரன் ஆதிக்கம் கொண்ட உலோகம். ஈயத்திலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சானது மனிதர்களது ஆன்மிக சிந்தனையை தூண்டும் விதமாகவும், மனித உயிர் சக்தியை பாதுகாக்கும் விதத்தில் செயல்படுவதாகவும் கருதப்படுகிறது. அதனால்தான் இன்றும் ஈய சொம்பு பயன்பாட்டில் உள்ளன. அக்காலங்களில் பித்தளை பாத்திரங்களில் ஈயம் பூசப்பட்டன, ஆனால் இக்காலத்தில் இது நடைமுறையில் இல்லை. 
  • இரும்பு எதிர்மறை சக்தி கொண்ட உலோகமாக இருக்கிறது. ஆனால், பல நல்ல காரியங்களுக்காக நமது முன்னோர்களால் இரும்பு பயன்படுத்தப்பட்டது. அதாவது, இரவு நேரங்களில் வெளியில் செல்ல நேரும்போது தீய சக்திகள் நெருங்காமல் இருக்க இரும்பு துண்டுகளை எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. 'இடி இடிக்கும்போது இரும்பை எடுத்து முற்றத்தில் வை..;' என்றொரு பழமொழி உண்டு. அதாவது, மின்னல் ஏற்படும்போது இரும்பை முற்றத்தில் வைத்தால் இரும்பின் ஈர்ப்பு சக்தியானது காற்றின் வாயிலாக வரும் மின்காந்த ஆற்றலை தன்பால் ஈர்த்துக் கொண்டு இடியை விலக்கிவிடும் என்பதாகும். அதனால்தான் இன்றும் நம் வீட்டில் பெரியவர்கள் இரும்பு கடாய், இரும்பு கரண்டி, மற்றும் தோசை வார்க்கும் தவாய் போன்றவை உபயோகிக்கின்றனர். இப்படியாவது நமக்கு இரும்புச் சத்து கிடைக்கவேண்டும் என்று அவர்கள் நோக்கம்.
  • அஷ்டதாது என்ற அஷ்டலோகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நமது நாட்டின் வட மாநிலங்களில், அஷ்டலோகம் எனப்படும் எட்டுவகை உலோக கூட்டு பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதாவது, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், துத்தநாகம், தகரம், இரும்பு மற்றும் பாதரசம் ஆகிய உலோகங்களின் கூட்டு சேர்க்கையானது கடவுள் சிலைகள் செய்ய பயன்பட்டு வந்துள்ளது. அத்தகைய சிலைகளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தைப் பருகுவதன் மூலமாக உடல் ரீதியான பல துன்பங்கள் விலகுவதை அனுபவத்திலும் அவர்கள் கண்டுள்ளனர். ஜைன மதத்தில் மகாவீரரின் விக்கிரகமும் அஷ்டலோகத்தால் செய்து வழிபடப்பட்டு வந்த தகவல்களும் உள்ளன.

உயர்தர உலோகங்த்தில் கிரங்களிலின் சூட்சமம் மற்றும் இயக்கம் உள்ளது என்பதை நாம் இன்னும் ஆராயவேண்டும்.

- ஜோதிட சிரோன்மணி கே.பி.தேவி - 9840405263

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com