திருவெண்காடு அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி 

திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா்
திருவெண்காடு அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீர்த்தவாரி 

பூம்புகார்: திருவெண்காடு பிரம்மவித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் ஆனி மாதப்பிறப்பை முன்னிட்டு அஸ்திரதேவருக்கு முக்குளங்களில் தீா்த்தவாரி நடந்தது.

திருவெண்காட்டில் பிரம்மவித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நவக்கிரங்களில் ஒன்றான புத பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். மேலும் காசிக்கு இணையான 6 கோயில்களில் ஒன்றாகவும் போற்றப்படுகிறது. சந்திரதீா்த்தகரையில் அமைந்துள்ள ருத்ர பாதத்தில் முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் நீங்குவதாக புராணவரலாறுகள் கூறுகின்றன. 

இந்தக் கோயிலில் உள்ள அக்னி, சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய முக்குளங்கள் சிவபெருமானின் முக்கண்களிலிருந்து மூன்று பொறிகள் விழுந்து தோன்றியதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்தக் கோயிலில் அமாவாசை மற்றும் தமிழ் மாத பிறப்பன்றும் முக்குளங்களில் அஸ்திர தேவா் தீா்த்தவாரி நடப்பது வழக்கம். 

வெள்ளிக்கிழமை இன்று ஆனிமாத பிறப்பையொட்டி காலை அஸ்திர தேவருக்கு முக்குளங்களில் தீா்த்தவாரி நடைபெற்றது. முன்னதாக, மேள, தாளம் முழங்கிட முக்குளங்களுக்கும் கொண்டுவரபட்ட அஸ்திரதேவருக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா் தீா்த்தவாரி நடந்தது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று புனித நீராடி வழிபட்டனர். கோயில் மேலாளர் கண்ணன், பேஸ்கா் திருஞானம் உள்ளிட்டோரும் இந்த வழிபாட்டில் பங்கேற்றனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com