நாவலடியான் காவல் தெய்வங்களுக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் காவேரி கரையில் சக்தி வாய்ந்த குல தெய்வங்களாக விளங்கும்
நாவலடியான் காவல் தெய்வங்களுக்கு நாளை மஹா கும்பாபிஷேகம்

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் காவேரி கரையில் சக்தி வாய்ந்த குல தெய்வங்களாக விளங்கும் அருள்மிகு நாவலடியான், அருள்மிகு காளியம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன.

இவ்வாலயத்திலுள்ள விமானங்கள், சந்நிதிகளுக்கு பக்தர்களின் நன்கொடை மூலமே திருப்பணிகள் செய்யப் பெற்றுள்ளன. இங்கு, நாவலடி கருப்பண்ண சுவாமி, நாவலடி பெரியசாமி, பட்டமரத்தான் காவல் தெய்வங்கள் அமைந்து மக்களைக் காத்தருள்கின்றனர். இக்கோயில்களுக்கு புதியதாக 60-அடி உயரத்தில் ராஜகோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. 

இவ்வாலயங்களின் திருக்குட முழுக்கு 17.6.2018-ம் தேதி, காலை 5.30 மணிக்கு விநாயகர், காளியம்மன், பரிவார கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து 9.00 மணிக்குமேல் ஸ்ரீசெல்லாண்டியம்மன், ஸ்ரீநாவலடியான் திருக்கோயிலின் ராஜகோபுர மகா கும்பாபிஷேகமும் தொடர்ந்து மகா அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெறும். முன்னதாக, யாகசாலை பூஜைகள் ஜூன் 13, 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றது.

தொடர்புக்கு:  93455 56333/ 94432 21001. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com