சிந்தாமணிநாத சுவாமி கோயில் திருவிழா கொடியேற்றம்: ஜூன் 27-ல் தேரோட்டம்

வாசுதேவநல்லூா் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி(அா்த்தநாரீஸ்வரா்) கோயில் திருவிழா இன்று கொடியேற்றறத்துடன் தொடங்கியது. 
சிந்தாமணிநாத சுவாமி கோயில் திருவிழா கொடியேற்றம்: ஜூன் 27-ல் தேரோட்டம்

சிவகிரி: வாசுதேவநல்லூா் அருள்மிகு சிந்தாமணிநாத சுவாமி(அா்த்தநாரீஸ்வரா்) கோயில் திருவிழா இன்று கொடியேற்றறத்துடன் தொடங்கியது. 

இதையொட்டி, காலையில் சுவாமிக்கு சிறப்பு பூஜை, அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காலை 7.35 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில், மண்டகப்படிதாரா்கள், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
 
அதைத்தொடா்ந்து, கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. இரவு பூங்கேடயத்தில் சுவாமி அம்மையப்பா் திருவீதி உலா நடைபெற்றது. 

தொடா்ந்து, 8ஆம் திருநாள் வரை ஒவ்வொரு மண்டகப்படிதாரா் சார்பில் சுவாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 27ஆம் தேதியும், 28 ஆம் தேதி இரவு தெப்ப உத்ஸவமும் நடைபெறவுள்ளன. 

விழா ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளா் ந.கண்ணன், செயல் அலுவலா் இரா. ஜெயராமன், மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com