நெல்லையப்பர் கோயிலில் இன்று ஆனித் திருவிழா கொடியேற்றம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்- காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழாவையொட்டி கடந்த 1-ஆம் தேதி விநாயகர் சன்னதி முன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) பிரதான கொடியேற்றத்துடன் ஆனிப் பெருந்திருவிழா தொடங்க உள்ளது. 
இதையொட்டி அதிகாலையில் சிறப்பு அபிஷேகத்துக்கு பின்பு காலை 6 முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றப்படும். மாலையில் பூங்கோயில் சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறும்.
புதன்கிழமை (ஜூன் 20) காலை 8.30 மணிக்கு வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி-அம்பாளும், இரவு 7 மணிக்கு சுவாமி வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளிக் கமல வாகனத்திலும் வீதியுலா வர உள்ளனர். 21 ஆம் தேதி இரவு 7 மணிக்கு சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா வருவர். 22 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு சுவாமி வெள்ளிக் குதிரை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் எழுந்தருள்வர். இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் திருவீதியுலா நடைபெறுகிறது.
26 ஆம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி நடராசப் பெருமான் வெள்ளை சாத்தி எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வருதலும், மாலை 4 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்கச்சப்பரத்தில் வீதியுலாவும் நடைபெறும்.
விழாவின் சிகர நிகழ்வாக வரும் 27-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஒன்றாம் திருநாள் முதல் 7 ஆம் திருநாள் வரை தினமும் மாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சோடச உபசார தீபாராதனை நடைபெறும். இதுதவிர தினமும் மாலையில் நின்றசீர் நெடுமாறன் கலையரங்கில் பக்தி கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் பா.ரோஷினி மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.
ஆனிப்பெருந்திருவிழாவையொட்டி தேரை சுத்தம் செய்யும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தூய்மை செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com