ஏரிகாத்த ராமர் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலின் விளம்பி வருட பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை (22ஆம் தேதி)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாள்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
ஏரிகாத்த ராமர் கோயில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலின் விளம்பி வருட பிரம்மோற்சவ விழா வெள்ளிக்கிழமை (22ஆம் தேதி)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாள்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
தொண்டை மண்டலத்தில் ராஜராஜ சோழனுக்கு முன்பு ஆட்சி புரிந்த உத்தமம சோழன் என்னும் மதுராந்தக சோழன் வேதம் ஓதும் அந்தணர்களுக்கு மானியமாக அளிக்கப்பட்ட பகுதியே மதுராந்தக சதுர்வேதி மங்கலமாகும். இந்தப் பகுதி மதுராந்தகம் என பெயர் மருவியது. சுக ரிஷி, விபண்டக மகரிஷி போன்ற முனிவர்கள் தவமிருந்ததும், திருமழிசையாழ்வார் சித்தி பெற்றதும் இத்தலத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு முக்கிய வைணவத் திருக்கோயிலாக விளங்கும் மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயிலில் விளம்பி ஆண்டு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கோயில் முழுவதும் மின்விளக்குகளாலும், நிழல் தரும் பந்தல்களாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (22ஆம் தேதி) துவஜாரோஹணம் எனப்படும் கொடியேற்ற நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. 
ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், சூரியப் பிரபை, சேஷ வாகனம், யாளி வாகனம், சந்திரப் பிரபை, யானை வாகனம், நாச்சியார் திருக்கோலம் பலக்கு ஆகியவற்றில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத கருணாகர பெருமான் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து காட்சி அளிக்கிறார். 
வேணுகோபாலன் திருக்கோலம் உள்ளிட்ட கோலங்களில் பெருமாளை பக்தர்கள் தரிசிப்பார். வரும் 24ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கருட சேவை, 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பெரிய தேர் பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 
விழாவுக்கான ஏற்பாடுகளை வேலூர் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், செயல் அலுவலர் (பொ) ந.தியாகராஜன், கிராமத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com