வேலூர் ஞானபண்டித சுவாமி திருக்கோயிலில் ஜூலை 1-ல் மஹா கும்பாபிஷேகம் 

அற்புதத் திருப்புகழால் ஆறுமுகவனை பாடிப்பரவிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளுக்கு திருவடிக்காட்சி...
வேலூர் ஞானபண்டித சுவாமி திருக்கோயிலில் ஜூலை 1-ல் மஹா கும்பாபிஷேகம் 

அற்புதத் திருப்புகழால் ஆறுமுகவனை பாடிப்பரவிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளுக்கு திருவடிக்காட்சி நல்கி யோகானுபூதி அளித்த ஒப்பற்ற தலம் ஞானமலை. வள்ளிப்பிராட்டியை மணந்து வள்ளி மலையிலிருந்து திருத்தணிகை செல்லும் வழியில் தங்கி இளைப்பாறிய போது முருகப் பெருமானின் திருவடிகள் பதிந்த சுவடுகளை ஞானமலையில் இன்றும் கண்டு இன்புறலாம். 

அவ்வளவு புகழ்பெற்ற பாணாவரம் அருகே அமைந்துள்ள ஞானமலை ஸ்ரீ ஞானபண்டித சுவாமி திருக்கோயிலில் ஜூலை 1-ம் தேதி காலை 7.30 மணிக்கு மேல் 9.00 மணிக்குள் கடக லக்னத்தில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 

முருகனடியார்கள், திருப்புகழ்ச் செல்வர்கள் மற்றும் பக்தகோடிகள் அனைவரும் இந்த மஹா கும்பாபிஷேக வைபவத்தில் கலந்துகொண்டு ஞானமலை ஸ்ரீ ஞானபண்டித சுவாமி திருவருளைப் பெற அழைக்கின்றோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com