திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் ரூ.26 லட்சத்தில் புதிய தேர் நிறுத்தம்

திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் தேருக்கு ரூ. 26 லட்சம் செலவில் புதிய தேர் நிறுத்தம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது. 
திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் அமைக்கப்பட்ட புதிய தேர் நிறுத்தம். 
திருவொற்றியூர் தியாகராஜர் கோயிலில் அமைக்கப்பட்ட புதிய தேர் நிறுத்தம். 

திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயில் தேருக்கு ரூ. 26 லட்சம் செலவில் புதிய தேர் நிறுத்தம் அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது. 
திருவொற்றியூர் தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் இருந்த பழைமையான தேர் சிதிலமடைந்தது. 75 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2015-இல், மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ரூ.46 லட்சம் செலவில் 41 அடி உயர மரத்தேர் செய்யப்பட்டு மாசி பிரமோற்வசம் அன்று தேரோட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து திருவிழாக்களின் போது தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தேரை நிறுத்த இடம் இல்லாததால் கோயில் பிரதான நுழைவு வாயில் அருகே தார்பாய் மூலம் மூடி வைக்கப்பட்டது. மழை பெய்யும்போது மழைநீர் சென்று தேர் சேதமடையும் நிலை இருந்து. இந்நிலையில் சன்னதி தெருவில் திருக்குளம் அருகில் ரூ.26 லட்சம் செல்வில் சுமார் 45 அடி உயர கூடாரம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.
வெள்ளிக்கிழமை காலை தேர் புதிய நிறுத்தத்துக்கு கொண்டு வரப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது. 
இப்புதிய நிறுத்தத்தில் தேரை பொதுமக்கள் எளிதில் பார்வையிடும் வகையில் கண்ணாடியிலான தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை கோயில் உதவி ஆணையர் சித்ராதேவி தலைமையில் அறநிலையத் துறை ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com