கும்பகோணம் மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கானோர் இன்று புனித நீராடினர். 
கும்பகோணம் மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்

தஞ்சாவூர்: கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரியில் பல்லாயிரக்கணக்கானோர் இன்று புனித நீராடினர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மாசிமாதம் மக நட்சத்திரத்தன்று மாசிமக விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மாசிமாத விழாவினை முன்னிட்டு ஆதிகும்பேஸ்வரர் உள்ளிட்ட 5 சிவாயங்களில் கடந்த 20-ம் தேதி முதல் பத்துநாள் உற்சவம் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வாக காலை ஆதிகும்பேஸ்வரர் காசிவிஸ்வநாதர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் ஆகிய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடகி ரிஷப வாகனங்களில் மகாமக குளத்தின் நான்கு கரையில் எழுந்தருளினர். 

அதைத்தொடர்ந்து அஸ்திரதேவர்கள் மகாமக குளத்தில் நீராடியதைத் தொடர்ந்து நான்கு கரைகள் மற்றும் குளத்தில் காத்திருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com