மேஷ லக்னத்தில் பிறந்தவர்களா நீங்கள்? உங்களின் குணம் இதுதான்! 

மேஷ லக்னத்தில் எத்தனையோ கோடி மக்கள் பிறந்திருந்தாலும் அவர்களுக்குள்ளே மனம், செயல், சிந்தனை, பண்பு, கல்வி,
மேஷ லக்னத்தில் பிறந்தவர்களா நீங்கள்? உங்களின் குணம் இதுதான்! 

மேஷ லக்னத்தில் எத்தனையோ கோடி மக்கள் பிறந்திருந்தாலும் அவர்களுக்குள்ளே மனம், செயல், சிந்தனை, பண்பு, கல்வி, நடைமுறை, வளர்ச்சி ஆகிய பல விஷயங்களிலும் சிறு வித்தியாசங்களாவது இருக்கும். ஆனால் பொதுத் தன்மைகளில் சில ஒற்றுமைகள் காணலாம். 

மேஷம் முதலிய பன்னிரு ராசிகளில் மேஷமானது முதல் ராசியாகத் தொடங்குகிறது. இந்த ராசியின் வீட்டுக்குச் சொந்தக்காரன் செவ்வாய். இதை உச்சவீடாகக் கொண்டு பலம் பெற்றிருப்பவன் சூரியன். 

இருபத்தேழு நட்சத்திரங்களைப் பன்னிரு ராசிகளுக்கும் இரண்டேகால் நட்சத்திரங்களாகப் பிரித்துள்ளார்கள். அசுவினி, பரணி, கிருத்திகையின் முதல் பாதம் வரையில் பிறந்தவர்களுக்கு ராசி மேஷ ராசியாகும். சித்திரை மாத ஆரம்பத்தில் காலையில் பிறந்தவர்களுக்கு மாத லக்கினமான மேஷ லக்னம் அமையும். நேரம் தள்ளிப்போகப் போக லக்னம் மாறும். 

மேஷ ராசிக்காரர்களுக்கு விருச்சிக ராசியில் அதாவது விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை இவற்றில் சந்திரன் சஞ்சரிக்கும் காலம் சந்திராஷ்டமம் எனப்படும். இந்த சமயத்தில் எந்த காரியத்தையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். மாதாமாதம் இதைக் குறித்துவைத்துக் கொண்டு அதற்கேற்பச் செயல்பட்டால் வீணாக வரும் தொல்லைகளைத் தவிர்க்கலாம். 

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களின் பொதுக்குணங்கள் 

மேஷ லக்னம் என்றாலே செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இவர்கள் எதிலும், தலைமையேற்று செயல்படுபவர்கள். முதன்மையாக இருந்து, வெற்றியடைக்கூடியவர்கள். 

சுக்கிரன் ஆதிக்கத்தில் வரக்கூடிய காலத்தில் இவர்களுக்கு நல்ல மனவாழ்வு அமையும். வாழ்வின் கடைசி வரை போராடி ஜெயிப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். 

உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்தில் விருச்சிகத்தில் செவ்வாய் வரும்போது போராடி போராடியே வாழ்வில் வெற்றிபெறும் சூழ்நிலை ஏற்படும். பேச்சாற்றல் சிறப்பாக அமையும், வாழ்க்கையில் கடைசி வரை வெற்றி நோக்கி பயணிப்பர் மேஷ லக்னக்காரர்கள். 

தாய்பாசம் அதிகம் கொண்டவர்கள். மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயும், சூரியனும் தீக்கோள்கள். ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் முன்கோபமும் படபடப்பும் அதிகம் இருக்கும். ருசித்துச் சாப்பிடக்கூடியவர்கள். 

வெளியில் அலைந்து திரியும் சுபாவமும் நிலையில்லாத சித்தம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். செவ்வாய்க்கோள் போர், ஆயுதங்கள் முதலியவற்றுக்கு அதிபதி. ஆகையால் மேஷ ராசிக்காரர்களுக்கு உடம்பில் காயங்களின் வடுக்களாவது அதிகம் இருக்கும். 

மேலும், இவர்கள் சுருண்ட அழகிய கேசம் பெற்றிருப்பார்கள். சிறந்த ஆடை, சிவந்த மேனி, தர்மம் செய்வதில் விருப்பம் கொண்டவர்களாக இருப்பார்கள். தர்ம சிந்தனையும் ஓரளவு அமைந்திருக்கும். இவர்களுக்கு காரப்பண்டங்கள் அதிகம் பிடிக்கும். இரண்டாவது ஸ்தானமாகிய வாக்கு ஸ்தானத்தையும் அதன் ஆட்சிக் கிரகத்தின் தன்மையையும் அறிந்து ருசியைத் தீர்மானிக்கின்றது. இது பொதுவான குனநலன்களே தவிர, ஜாதகர்கள் அவரவர் தசாபுத்தியை வைத்து நன்மை, தீமைகள் நடைபெறும். 

மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள், தங்கள் நல்வாழ்வுக்கு இந்த தாயுமானவர் சுவாமி பதிகத்தை மனதார சொல்லலாம்... 

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய் 
அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப் 
பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப் 
பரமாகிச் சொல்லரிய பான்மை ஆகித் 
துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம் 
தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி 
நிகர் இல் பசுபதியான பொருளை நாடி 
நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com