23 ஆண்டுகளாக ஆன்மிக சேவை செய்த திருவண்ணாமலை யானை ருக்கு மரணம்: சோகத்தில் பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
23 ஆண்டுகளாக ஆன்மிக சேவை செய்த திருவண்ணாமலை யானை ருக்கு மரணம்: சோகத்தில் பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை ருக்கு நள்ளிரவு 12 மணிக்கு மேல் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

கடந்த 23 வருடங்களாக அண்ணாமலையார் கோயிலில் பணியாற்றி வந்த பெண் யானை ருக்குவுக்கு வயது 30. இந்நிலையில், நேற்று கோயிலின் 5-ம் பிரகாரத்தில் கட்டப்பட்டிருந்து. அப்போது இரும்பு தடுப்புச் சுவரில் மோதியதில் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், ருக்குவுக்கு உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. 

யானை ருக்குவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நள்ளிரவு 12.00 மணிக்கு உயிரிழந்தது. ருக்கு அனைத்து புத்துணர்வு முகாமிலும் பங்கேற்றுள்ளது. 

அண்ணாமலையார் கோயில் வாசலில் யானை ருக்கு நிற்கும் போது கோயிலுக்கே தனி அழகைக் கூட்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  தினமும் ருக்குவிடம் ஆசீர்வாதம் வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில், ருக்கு உயிரிழந்த சம்பவம் அனைத்து பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் பக்தர்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளிப்புற சுற்றுச் சுவர் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனத் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com