இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தேர் மீண்டும் ஓடத் துவங்கியுள்ளது.
இனி வழக்கம் போல் திருச்செந்தூரில் தங்கத்தேர் ஓடும்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 6 மாதங்களுக்குப் பிறகு தங்கத்தேர் மீண்டும் ஓடத் துவங்கியுள்ளது. இது பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, கிரிப் பிரகாரத்தில் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அப்பகுதியைச் சுற்றி வந்த தங்கத்தேர் உலாவும் நிறுத்தப்பட்டது. இதனால், பக்தர்கள் மிகுந்த வருத்தடைந்தனர். 

கிரிப் பிரகார மண்டப பணிகள் தற்போது நிறைவடைந்த நிலையில், வழக்கம்போல் தங்கத்தேர் மீண்டும் நேற்றில் இருந்து ஓடத் தொடங்கியுள்ளது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கதேர் நேற்று பக்தர்களின் கோஷத்துடன் இழுக்கப்பட்டது. இது முருக பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தங்கத்தேரைக் காண வழக்கத்தை விடக் கூடுதலான பக்தர்கள் கோயிலில் கூடினர். இனி வழக்கம் போல் தினமும் மாலை 6 மணிக்கு தங்கத்தேர் ஓடும் என்று கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com