வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி 

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி 

ஜம்மு பகுதியில் அமைந்துள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ரெய்சா மாவட்டத்தின் கத்ரா என்னும் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி குகைக்கோயில். புனிதமான இந்து சமயக் கோயில்களில் இதுவும் ஒன்று. சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத்தலமாக விளங்குகின்றது. 

கடந்த புதன்கிழமை திரிகுடா மலைப்பகுதியில் திடீரென காட்டுத் தீ பரவியதால், புனித யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. 

இதுகுறித்து கோயில் மூத்த அதிகாரி கூறுகையில், 

திரிகுடா மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதைதொடர்ந்து, பக்தர்கள் செல்லும் பேட்ரி கார் வழியாகவும் காட்டுத் தீ பரவியதால் சுமார் 25 ஆயிரம் பக்தர்கள் கத்ராவில் முகாமிட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் சில பகுதியில் புகைந்து வருகின்றது. 

காட்டுத்தீயை அணைக்கும் பணிகளும், கோயிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 

இந்நிலையில், தற்போது காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து யாத்திரை செல்ல பக்தர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com