ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் கைசிக ஏகாதசி விழா 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் கைசிக ஏகாதசி நேற்று தொடங்கி இன்று காலை வரை நடைபெற்றது. 
ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் திருக்கோயிலில் கைசிக ஏகாதசி விழா 

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் கைசிக ஏகாதசி நேற்று தொடங்கி இன்று காலை வரை வெகு விமரிசையாக நடைபெற்றது. 

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் கைசிக ஏகாதசி விழா நிகழாண்டில் திங்கள்கிழமையான நேற்று காலை நடைபெற்றது. இதில், முதல் புறப்பாடாக நம்பெருமாள் காலை 10 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். மாலை 5.30 மணிக்கு மேற்படி மண்டபத்திலிருந்து புறப்பட்டு 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேர்ந்தார்.

நம்பெருமாள் இரண்டாம் புறப்பாடு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து 9.30 மணிமுதல் 11.30 மணி வரை நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்கள் சமர்ப்பித்து, கற்பூர ஹாரத்தி அரையர் சேவையுடன் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசனம் செய்தனர். 

பின்னர் ஸ்ரீ பட்டர் சுவாமிகள் கைசிக புராணத்தை செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி வரை வாசித்தார். மேற்படி மண்டபத்திலிருந்து 5.15 மணிக்கு புறப்பட்டு மேல் படி வழியாக 5.45 மணிக்கு கட்டில் கற்பூர படியேற்ற சேவை நம்பெருமாள் கண்டருளினார். 6 மணிக்கு மூலஸ்தானத்தை அடைந்தார் நம்பெருமாள். 

ஏற்பாடுகளைக் கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com