குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

2018-ம் ஆண்டு குருப்பெயர்ச்சியில் 27 நட்சத்திரக்காரர்களுக்குமான பிளஸ் மற்றும் மைனஸ் என்ன?
குருப்பெயர்ச்சி பலன்கள்: 27 நட்சத்திரத்துக்குமான பிளஸ் - மைனஸ்!

2018-ம் ஆண்டு குருப்பெயர்ச்சியில் 27 நட்சத்திரக்காரர்களுக்குமான பிளஸ் மற்றும் மைனஸ் என்ன? என்பதை தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பலனடைவோம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

அஸ்வினி:

பிளஸ் (+) : பொருளாதார முன்னேற்றம் உண்டு
மைனஸ் (-) : வாக்கு கொடுப்பதில் கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபட்டு காரியத்தை துவங்குங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சூரியன்

பரணி:

பிளஸ் (+) : நிகழ்ச்சிகள் நடக்கும்.

மைனஸ் (-) : வீண் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலிலுள்ள சக்கரத்தாழ்வாரை பதினொருமுறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்கிரன், செவ்வாய்

கிருத்திகை:

பிளஸ் (+) : மனக்குழப்பம் தீரும்.

மைனஸ் (-) : வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்: மாதம்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

{pagination-pagination}

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

கிருத்திகை 2-ம் பாதம்:

பிளஸ் (+) : மனக்குழப்பம் தீரும்.

மைனஸ் (-) : வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பரிகாரம்: மாதம்தோறும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானுக்கு அரளி மாலை சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

ரோகிணி:

பிளஸ் (+) : வீண்செலவு குறையும்.

மைனஸ் (-) :  பண விஷயங்களில் கவனம் தேவை.

பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்குக் கொண்டைக்கடலை மாலை அணிவியுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு

மிருகசீரிஷம்:

பிளஸ் (+) : பதவி உயர்வு கிடைக்க பெறலாம்.

மைனஸ் (-) : குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்

பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்

{pagination-pagination}

(மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மிருகசீரிஷம் 3-ம் பாதம்:

பிளஸ் (+) : பதவி உயர்வு கிடைக்க பெறலாம்.

மைனஸ் (-) : குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும்

பரிகாரம்: நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு நெய் தீபமேற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்

திருவாதிரை:

பிளஸ் (+) : பணவரத்து திருப்தி தரும்

மைனஸ் (-) : வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்

பரிகாரம்: தக்ஷிணாமூர்த்திக்கு எலுமிச்சம்பழ சாதம் செய்து நைவேத்யம் செய்யலாம்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், புதன், சுக்கிரன்

புனர்பூசம்:

பிளஸ் (+) : ஆன்மீக நாட்டம் உண்டாகும். 

மைனஸ் (-) : வீண் அலைச்சல் ஏற்படலாம். 

பரிகாரம்: தினமும் ஸ்ரீராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

புனர்பூசம் 4-ம் பாதம்:

பிளஸ் (+) : ஆன்மீக நாட்டம் உண்டாகும். 

மைனஸ் (-) : வீண் அலைச்சல் ஏற்படலாம். 

பரிகாரம்: தினமும் ஸ்ரீராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்

பூசம்:

பிளஸ் (+) : பணம் வரவு நன்றாக இருக்கும்.

மைனஸ் (-) : வாகனங்களைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசம் தினமும் சொல்லி வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு

ஆயில்யம்:

பிளஸ் (+) : குடும்பத்தில் மரியாதை கூடும்.

மைனஸ் (-) : நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும்.

பரிகாரம்: தினமும் அம்பாளை வெள்ளை மலர் கொண்டு வழிபடவும். 
அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், குரு

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

மகம்:

பிளஸ் (+) : புதியதாக இடம் வாங்குவீர்கள்

மைனஸ் (-) : அலைச்சல் அதிகரிக்கும்

பரிகாரம்: தினமும் சூரியபகவானை வழிபாடு செய்யுங்கள். சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு

பூரம்:

பிளஸ் (+) : பொருளாதாரத்தில் ஏற்றம்

மைனஸ் (-) : உடல்நலத்தில் கவனம் தேவை

பரிகாரம்: தினமும் சிவபெருமானை வழிபட்டு நந்தி தேவரையும் தரிசனம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், சுக்கிரன், குரு

உத்திரம்:

பிளஸ் (+) : மதிப்பு அதிகரிக்கும்

மைனஸ் (-) : உடற்சோர்வு ஏற்படும்

பரிகாரம்: பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், புதன்

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உத்திரம் 2-ம் பாதம்:

பிளஸ் (+) : மதிப்பு அதிகரிக்கும்

மைனஸ் (-) : உடற்சோர்வு ஏற்படும்

பரிகாரம்: பழைய கோவில்களுக்கு தீபமேற்றுவதற்கு எண்ணெய் வாங்கிக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், புதன்

அஸ்தம்:

பிளஸ் (+) : பொறுப்புகள் அதிகரிக்கும்

மைனஸ் (-) : பேச்சில் நிதானம் அவசியம்

பரிகாரம்: காமாட்சி அம்மனை வழிபட முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன்

சித்திரை:

பிளஸ் (+) : சமயோசித புத்தி அதிகரிக்கும்

மைனஸ் (-) : சின்னச் சின்ன செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்பரிகாரம்:

பரிகாரம்: திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனைத் தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், புதன், சுக்கிரன்

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சித்திரை 3-ம் பாதம்:

பிளஸ் (+) : சமயோசித புத்தி அதிகரிக்கும்

மைனஸ் (-) : சின்னச் சின்ன செலவுகளைச் சந்திக்க நேரிடலாம்பரிகாரம்:

பரிகாரம்: திருச்செந்தூர் சென்று செந்தில் வேலவனைத் தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், புதன், சுக்கிரன்

சுவாதி:

பிளஸ் (+) : காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும்

மைனஸ் (-) : அலைச்சல் உண்டாகலாம்

பரிகாரம்:  பெருமாள் கோவிலுக்கு சென்று ஸ்ரீநரசிம்மரை வழிபட்டு நெய் தீபம் ஏற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்

விசாகம்:

பிளஸ் (+) : செயல் திறன் அதிகரிக்கும்

மைனஸ் (-) : குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்

பரிகாரம்: குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி வழிபட மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

விசாகம் 4-ம் பாதம்:

பிளஸ் (+) : செயல் திறன் அதிகரிக்கும்

மைனஸ் (-) : குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும்

பரிகாரம்: குருபகவானுக்கு முல்லை மலர் சாற்றி வழிபட மேன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு

அனுஷம்:

பிளஸ் (+) : எதிர்ப்புகள் விலகும்

மைனஸ் (-) : நட்பு ரீதியில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மையைத் தரும்

பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபட்டு ஒன்பது முறை வலம் வர இன்னல்கள் மறையும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு

கேட்டை:
பிளஸ் (+) : நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்

மைனஸ் (-) : காரிய தடைதாமதம் ஏற்படும்

பரிகாரம்: கந்தர் சஷ்டி கவசம் சொல்லி முருகப் பெருமானை வழிபடுங்கள். ஏழை எளியோருக்கு உதவுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

மூலம்:

பிளஸ் (+) : கடன்கள் பைசலாகும்

மைனஸ் (-) : வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

பரிகாரம்: குருவாயூர் சென்று குருவாயூரப்பனை தரிசித்து வாருங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், குரு

பூராடம்:

பிளஸ் (+) : கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும்.

மைனஸ் (-) : எதிர்பாராத தடங்கல்கள் வரலாம்

பரிகாரம்: குடும்பத்தில் அமைதி உண்டாகத் தியானம், யோகா போன்றவற்றை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சுக்கிரன், குரு

உத்திராடம்:

பிளஸ் (+) : பணவரத்து திருப்தி தரும்

மைனஸ் (-) : திடீரென்று கோபம் வரும்

பரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்வது நல்லது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவதும் நல்லது.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், குரு

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

உத்திராடம் 2-ம் பாதம்:

பிளஸ் (+) : பணவரத்து திருப்தி தரும்

மைனஸ் (-) : திடீரென்று கோபம் வரும்

பரிகாரம்: முன்னோர் வழிபாடு செய்வது நல்லது. குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவதும் நல்லது.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், குரு

திருவோணம்:

பிளஸ் (+) : செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். 

மைனஸ் (-) : பணம் பரிவர்த்தனையில் கவனம் தேவை. 

பரிகாரம்: விநாயகர் அகவல் சொல்லி விநாயகரை வணங்கி பதினொரு முறை வலம் வரவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன்

அவிட்டம்:

பிளஸ் (+) : உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மைனஸ் (-) : பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அவிட்டம் 3-ம் பாதம்:

பிளஸ் (+) : உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

மைனஸ் (-) : பேச்சில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன்

சதயம்:

பிளஸ் (+) : அரசாங்க காரியங்கள் சாதகமாகப் பலன்  தரும்.

மைனஸ் (-) : உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: ஸ்ரீ லஷ்மி ஸகஸ்ரநாமத்தை உச்சரித்து வாருங்கள். தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், சுக்கிரன்

பூரட்டாதி:

பிளஸ் (+) : எதிர்ப்புகள் விலகும். 

மைனஸ் (-) : வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். 

பரிகாரம்: வியாழன் தோறும் நெய்விளக்கேற்றி குருபகவானை வழிபடவும். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பூரட்டாதி 4-ம் பாதம்:

பிளஸ் (+) : எதிர்ப்புகள் விலகும். 

மைனஸ் (-) : வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். 

பரிகாரம்: வியாழன் தோறும் நெய்விளக்கேற்றி குருபகவானை வழிபடவும். மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: குரு, சுக்கிரன்

உத்திரட்டாதி:

பிளஸ் (+) : பயணங்கள் வெற்றியைத் தரும். 

மைனஸ் (-) : மனம் ஒரு நிலைப்படாது.

பரிகாரம்: துளசிமாலை சாற்றி பெருமாளுக்கு தயிர்ச்சாதம் நைவேத்யம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: செவ்வாய், சுக்கிரன், குரு

ரேவதி:

பிளஸ் (+) : பணச்சிக்கல் தீரும்.

மைனஸ் (-) : வாக்குறுதிகளைத் தவிர்க்கவும்.

பரிகாரம்: உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சென்று அர்ச்சனை செய்து குருபகவானை வழிபடவும்.

அதிர்ஷ்ட ஹோரைகள்: புதன், குரு, சுக்கிரன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com