தசரா பண்டிகை: 4 கோடி ரூபாய் நோட்டுகளால் ஜொலித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்! 

ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மன் கோயில் ஒன்றில் தசரா பண்டிகையை
தசரா பண்டிகை: 4 கோடி ரூபாய் நோட்டுகளால் ஜொலித்த கன்னிகா பரமேஸ்வரி அம்மன்! 

ஆந்திர மாநிலத்தில் உள்ள அம்மன் கோயில் ஒன்றில் தசரா பண்டிகையை முன்னிட்டு தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அம்மனை அலங்கரிப்பட்டது. 

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தசரா பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வருகின்றது. குருபாம் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் தசரா விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு தசரா பண்டிகையை முன்னிட்டு அம்மன் மகாலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியசித்தார். 

இதையொட்டி அம்மனுக்கு 4 கோடி ரூபாய் நோட்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதைத்தவிர அங்க பிஸ்கட்டுகளும், ஆபரணங்களும் வைத்து அம்மனுக்கு அலங்கரிப்பட்டது. 

இதுகுறித்து கோயில் நிர்வாகி கூறுகையில், 

140 ஆண்டுகள் பழமையானது இக்கோயில். இங்கு வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதால் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி பண்டிகையின் போது கோயிலின் உட்புறம் மற்றும் அம்மன் சிலை இருக்கும் இடத்தில் புதிய ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com