வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா, கொடி இறக்கத்துடன் சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது.
வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா நிறைவு

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு பெருவிழா, கொடி இறக்கத்துடன் சனிக்கிழமை மாலை நிறைவடைந்தது.
 உலக புகழ்ப் பெற்ற வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னைப் பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த ஆகஸ்ட் 29 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.
 ஆண்டுப் பெருவிழா நவநாள் வழிபாடாக தினமும் தமிழ், ஆங்கிலம், மராத்தி, மலையாளம், கொங்கனி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன. மாலை நிகழ்வாக தினமும், ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம், மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
 ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளுள் ஒன்றான அலங்காரத் தேர் பவனி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
 அன்னையின் பிறந்த நாள்: புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் விழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6 மணிக்கு, தஞ்சாவூர் மறை மாவட்ட ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்புக் கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
 இதில், பேராலய அதிபர் ஏ.எம்.ஏ. பிரபாகர் அடிகளார், துணை அதிபர் சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரெத்தினம் மற்றும் பங்குத் தந்தையர்கள், உதவிப் பங்குத் தந்தையர்கள், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 ஆண்டு பெருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், பேராலயக் கீழ்க்கோயிலில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசீர் மற்றும் தமிழில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com