வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவையொட்டி, அம்மன் மேளதாளம் முழங்க சிறப்பு வாண வேடிக்கையுடன் இரவு வீதியுலா வந்து பக்தர்களுக்கு
 வேம்புலியம்மன் கோயில்  ஜாத்திரை  உற்சவத்தில்   சிறப்பு  அலங்காரத்தில்  வீதி  உலா  வந்த  அம்மன்.
 வேம்புலியம்மன் கோயில்  ஜாத்திரை  உற்சவத்தில்   சிறப்பு  அலங்காரத்தில்  வீதி  உலா  வந்த  அம்மன்.


திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவையொட்டி, அம்மன் மேளதாளம் முழங்க சிறப்பு வாண வேடிக்கையுடன் இரவு வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இக்கோயில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆவணித் திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ஜாத்திரை திருவிழா கடந்த 7-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, 16-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், அம்மன் புறப்பாடு, புடவை சாத்துப்படி, புஷ்ப சாத்துப்படி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக ஞாயிற்றுக்கிழமை, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மேளதாளம் மற்றும் வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் தினமும் அன்ன தானம் செய்யப்பட்டது. 
விழா ஏற்பாடுகளை வேம்புலி அம்மன் சேவா சங்கம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com