பரிகாரத் தலங்கள்

இழந்த பதவியை மீண்டும் பெற… யாழ்முறிநாதர் கோவில், திருதருமபுரம்

இழந்த பதவி, பெருமைகளை மீட்பதற்கான பரிகாரத் தலமாக இருப்பது திருதரும்புரத்தில் உள்ள யாழ்முறிநாதர் கோவில்.

07-04-2017

செவ்வாய் தோஷ பரிகாரத் தலம் - சூட்சுமபுரீஸ்வரர் கோவில், சிறுகுடி

தமிழ்நாட்டில் உள்ள நவகிரகத் தலங்களில் செவ்வாய்க்கு உரிய தலமாகப் போற்றப்படுவது வைத்தீஸ்வரன்கோவில்.

31-03-2017

பிரம்மஹத்தி தோஷம் தீக்கும் மஹாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர்

பாடல் பெற்ற தென்கரை சிவஸ்தலங்கள் வரிசையில் 30-வது தலமாக இருப்பது திருவிடைமருதூர்.

10-03-2017

பங்காளிச் சண்டை - பிரச்னைகள் தீர அபிராமேஸ்வரர் கோவில், திருஆமாத்தூர்

பாடல் பெற்ற நடுநாட்டுத் தலங்கள் வரிசையில் 21-வது தலமாக இருப்பது திருஆமாத்தூர்.

24-02-2017

அம்மை நோய்க்கு ஒரு பரிகாரத் தலம் சாட்சிநாதர் கோவில், திருஅவளிவநல்லூர்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 100-வது தலமாக விளங்குவது அவளிவநல்லூர். தன்னை வழிபடும் ஒரு அர்ச்சகரின் மகளுக்கு ஏற்பட்ட அம்மை நோயின் பாதிப்பை நீக்கி அவளுக்கு நல்வாழ்வை அருளிய இறைவன் கோயில் கொண்

17-02-2017

பெண்கள் ருது பரிகாரத் தலம் சொர்ணபுரீசுவரர் கோவில், ஆண்டாங்கோயில்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 97-வது தலமாக விளங்கும் திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்

10-02-2017

ராகு - கேது தோஷம் போக்கும் நாகநாதசுவாமி கோவில், திருப்பாதாளீச்சரம் (பாமணி)

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 104-வது தலமாக இருக்கும் திருபாதாளீச்சரம், ஒரு சிறந்த பரிகாரத் தலம். தற்போது இது பாமணி என்று வழங்கப்படுகிறது.

03-02-2017

ராகு - கேது தோஷம் நீக்கும் தலம் பாம்புபுரேஸ்வரர் கோவில், திருப்பாம்புரம்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச் சிறந்த ராகு - கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம்.

27-01-2017

வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பர் கோவில், கீழ்வேளூர்

பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 84-வது தலமாக இருப்பது கீழ்வேளூர் திருத்தலம்.

20-01-2017

பரிகாரத் தலங்கள்

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு போன்றவை. இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்குச் சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும்.

சிவலிங்கத்துக்கு வலை கட்டிப் பாதுகாத்த சிலந்தி, மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து, தமிழகத்தில் பல கோவில்களைக் கட்டி சிவத்திருப்பணி செய்து புகழ்பெற்றான். சிவன் கோவில் விளக்குத் திரியை தன்னை அறியாமல் தூண்டிவிட்ட எலி, மறுபிறவியில் சிவன் அருளால் மகாபலிச் சக்ரவர்த்தியாகப் பிறக்கும் பாக்கியம் பெற்றது. சிவ நாமத்துக்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனத்தால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும்; மனம் தூய்மை அடையும்.

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்தப் புனித பாரதத்தில், தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைணவ திவ்ய தேசங்கள் எண்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. அதேபோன்று, இந்தியாவில் பல சிவன் கோவில்கள் இருந்தாலும் குறிப்பாக, பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 276 ஆலயங்களில் 266 கோவில்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன. இந்தக் கோவில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

அநேக சிவன் கோவில்கள் இருந்தாலும், 276 கோவில்கள் மட்டுமே பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்ற சிறப்பைப் பெற்றிருக்கின்றன. தேவார மூவர் என்று போற்றப்படும் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர் வாழ்ந்திருந்த காலமாகிய 7, 8 மற்றும் 9-ம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்ட தேவாரப் பதிகங்களில் இந்தக் கோவில்களைப் பற்றியும், கோவில்களில் குடிகொண்டுள்ள சிவபெருமானைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் என்று கூறப்படும் இந்தக் கோவில்கள் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டவை. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த இந்தக் கோவில்கள் தனிச்சிறப்பு பெற்றதில் வியப்பில்லை. இந்த 266 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் அநேக தலங்கள் பரிகாரத் தலங்களாகவும் இருப்பதால் இவை மேலும் சிறப்பு பெறுகின்றன.

இன்றைய காலத்தில் மனிதர்களாகப் பிறந்த எல்லோரும் தங்களது வாழ்வின் பல கட்டங்களில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர்கொள்கின்றனர். ஏனெனில், பிரச்னை என்பது அவரவர் வாழ்க்கையில் அவர்கள் பிறந்த நேரத்துக்கு ஏற்ப வருகின்றன. ஜாதக ரீதியாக என்ன செய்தால் தங்களது பிரச்னைகள் தீரும், அதற்கு என்ன பரிகாரங்கள் செய்ய வேண்டும் என்று எல்லோரும் தெரிந்துகொள்ள நினைக்கின்றனர். அதில் தவறில்லை. அதேசமயம் நமது முன்னோர்கள், பிரச்னைகளுக்குத் தீர்வாக வழியும் கூறி இருக்கின்றனர். 

நல்வாழ்வு அருளும் பரிகாரத் தலங்கள் என்ற இந்தப் பகுதியில், தமிழ்நாட்டில் உள்ள பரிகாரத் தலங்கள் பற்றிய தொடர் கட்டுரைகள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளியாகும். இறை நம்பிக்கையுடன் இந்தப் பரிகாரத் தலங்களுக்குச் சென்று இறைவனை தரிசித்தால், எல்லா நலன்களும் கிட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இப்பகுதியில் வெளியாகும் பாடல்களை ஒலிப்பதிவு செய்து தொகுத்து அளிக்கும் மயிலாடுதுறை சொ. சிவக்குமார் அவர்களுக்கு நன்றி.

என்.எஸ். நாராயணசாமி

என்.எஸ். நாராயணசாமி

நல்வாழ்வு அருளும் பரிகாரத் தலங்கள் என்ற இந்தப் பகுதியை எழுதுபவர் திரு. என்.எஸ். நாராயணசாமி. சென்னை, பெரம்பூரில் வசிக்கும் இவர், வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர். தமிழகத்தில் உள்ள பாடல் பெற்ற 266 சிவ ஸ்தலங்களுக்குச் சென்று, அந்தக் கோயில்களைப் பற்றிய குறிப்புகளைப் படங்களுடன் தொகுத்து சிவா டெம்பிள்ஸ் டாட் காம் (www.shivatemples.com) என்ற பெயரில் கடந்த பதினோறு வருடங்களாக நிர்வகித்து வருகிறார். தொடர்புக்கு: 044 - 25518747, 9884136416.

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை