ப்ரீவியஸ் கமிட்மெண்ட்டுகளால் பல தமிழ் படங்களை  நான் லூஸ் பண்ணியிருக்கேன்

ஸ்ரீதேவியின் ஒரு நாள் 
ப்ரீவியஸ் கமிட்மெண்ட்டுகளால் பல தமிழ் படங்களை  நான் லூஸ் பண்ணியிருக்கேன்

வேளச்சேரி விஜயகுமார் -மஞ்சுளா தம்பதியின் பிரமாண்டமான பங்களாவில் படபபிடிப்பு. "பொப்பிலி புலி" என்ற அந்த 70 எம்.எம்  தெலுங்குப்  படம் பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டிருந்தது. டைரக்டர்  தாசரி நாராயணராவ்.

செண்டிமெண்டலாய் முதல் ஷாட் கற்பூரம் ஏற்றி ஸ்ரீதேவி மாடிப்படிகளில் ஏறி ஓடி வருவது போல் படமாக்கப்பட்டது. என்.டி.ஆர் சம்பந்தப்பட்ட ஒரு ஷோலோ ஷாட் எடுக்கப்படும் நேரத்தில் எங்களை அழைத்தார் ஸ்ரீதேவி.

"இந்த படத்துக்காக என் கால்ஷீட் போன வருஷம் கொடுத்திருந்தேன்.   தமிழ் இண்டஸ்ட்ரிய நான் புறக்கணிக்கிறதா ஒரு தப்பபிப்பிராயம் ஏற்பட்டிருக்குன்னு தோணுது. பட், அது உண்மையில்ல. ரீசன்டா கே.ஆர்.ஜி சார் அவரோட அடுத்த படத்துக்கு  தேதி கேட்டாரு. அடுத்த வருஷம் தேதி தர நான் தயாராயிருந்தேன். பிகாஸ் அது வரைக்கும் எல்லார்கிட்டயும் கமிட் பண்ணிக்கிட்டிருக்கேன். ஏற்கனவே ஒத்துக்கிட்ட படங்களுக்கு மாட்டேன்னு எப்படி சொல்ல முடியும்? எனக்கே சில சமயம் சங்கடமா இருக்கு. ப்ரீவியஸ் கமிட்மெண்ட்டுகளால் பல தமிழ் படங்களை  நான் லூஸ் பண்ணியிருக்கேன்.  அவ்வளவு டைட்டா கால்ஷீட் இருக்கு. ஒரு நாளைக்கு 24 மணி நேரத்துக்கு பதிலா 36 மணி நேரம் இருந்தா நல்லாயிருக்கும்னு தோணுது. ".  என்று மென்மையாய் சிரித்தபடி சொன்னார் ஸ்ரீதேவி.

"நம்ம கமல், ரஜினிபத்தி சொல்லுங்க. யார்கூட நடிக்கும் போது ரொம்ப சிறப்ப உங்களால செய்ய முடியுது?

"கமல்... எங்கப்பா அடிக்கடி சொல்ற மாதிரி ஒரு வெர்ஸ்டைல் ஆக்டர்.   ..எ  மேன்  ஆஃப் ஆல்  டேலண்ட்ஸ் . சின்ன சின்ன விஷயங்கள்ல  கூட அவர் எடுத்துக்கற அக்கறை  பிரம்மிக்க  வைக்கும். சரியா வராத பல சமயங்கள்ல சொல்லிக் கொடுத்து ஹெல்ப்  பண்ணுவார்"

"ரஜினி இன்னொரு டைப். ..இத பாரு ஸ்ரீதேவி, நான் இப்படி வர்றேன் , நீ அந்த பாக்கத்துல இருந்து வர்றே" என்று தன்னை சரி பார்த்துக் கொள்வதோடு  , எனக்கும் அது சரியா வரணும்னு ஸ்டிரெய்ன் பண்ணிக் கொள்வார் இது அவருகிட்ட எனக்குப்  புடிச்ச ரொம்ப நல்ல குணம். "

"இப்ப தமிழ் இண்டஸ்ட்ரி எப்படியிருக்கு?"

"ரசனைல ஒரு நல்ல மாறுதல் தெரியுது, முன்னெல்லாம் ரொம்ப லிமிட்டட் பிக்சர்ஸ்தான் வரும். .ஆர்டிஸ்ட்டும் கொஞ்சம்  பேர்தான் இருந்தாங்க. இப்ப வாரத்துக்கு ரெண்டு புதுப்படமாவது ரிலீசாகுது.  ..ஸோ..நெறைய ஆர்டிஸ்டுங்க தேவைபபடறாங்க..."புதுசு புதுசா நெறைய பேரு வர்றது  சந்தோஷமாயிருக்கு.."

சந்திப்பு : உத்தமன்.

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.08.81 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com